Continues below advertisement

தமிழ்நாட்டில் நவம்பர் 12-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், வரும் 13-ம் தேதி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வானிலை மையத்தின் அறிக்கை என்ன.?

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இன்று(09.11.25) 3 மாவட்டங்களில் கனமழை

அதேபோல், தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று(09.11.25) கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

நவம்பர் 12-ம் தேதி 12 மாவட்டங்களில் கனமழை

மேலும், நவம்பர் 12-ம் தேதி அன்று, தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 13-ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை

இதேபோல், நவம்பர் 13-ம் தேதி அன்று, தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.