நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு, அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். அதேபோல், இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் அறிவிப்புகள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

நீலகிரி, கோவைக்கு நாளை, நாளை மறுநாள் ரெட் அலெர்ட்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, நீலகிரி, கோவை மாவட்டங்களக்கு நாளை(29.05.25) மற்றும் நாளை மறுநாள்(30.05.25) அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அதி கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்

இந்நிலையில், இன்று(28.05.25) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் ஒருசில இடங்களிலும், கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளிலும், நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளிலும் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பு

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வரும் 31-ம் தேதி வரை, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலின் பெரும்பாலான பகுதிகளிலும், மத்திய வங்கக்கடலின் ஒருசில பகுதிகளிலும் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடை இடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.