Breaking LIVE: நாளை அதிமுக பொதுக்குழு அறிவிப்பு - தீவிர ஆலோசனை

அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 10 Jul 2022 10:58 AM
Breaking LIVE: நாளை அதிமுக பொதுக்குழு அறிவிப்பு - தீவிர ஆலோசனை

நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இல்லங்களில் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை...பொதுக்குழு நடக்குமா இல்லையா என்பது குறித்த தீர்ப்பை காலை 9 மணிக்கு உயர்நீதிமன்றம் வெளியிடுகிறது

Breaking LIVE: நீட் தேர்வுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் பெறலாம் என அறிவிப்பு

ஜூலை 17 ஆம் தேதி நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் நாளை முதல் விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது

சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வில் கட்சியை இணைக்கும் திவாகர்..!

திவாகரன் தனது அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் இணைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். நாளைமறுநாள் இரு கட்சிகளின் இணைப்பு விழாவும் நடைபெற உள்ளது. 

Breaking LIVE: எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் வீட்டில் சோதனை

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் சகோதரர் வசந்தகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை - கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள வீட்டில் நேற்று இரவு முதலே சோதனை நடைபெற்று வருகிறது

Breaking LIVE: ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு முதியவர் வழக்கு

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தில் 50% பங்கு கேட்டு கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு....ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவி ஜெயம்மாவின் மகன் வாசுதேவன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தியாவில் ஒரே நாளில் 49 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். 

Breaking LIVE: ஜூலை 12 ஆம் தேதி திருப்பதியில் விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை 12 ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு விஐபி தரிசனம் ரத்து..காலை 6 மணி முதல் 10 மணி வரை கோவிலை சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது. 

Breaking LIVE: திருப்பதி அருகே விபத்து.. தாய், மகன் பலி

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகேயுள்ள மல்லவரத்தில் சாலை தடுப்பில் கார் மோதியதில் ஈரோட்டைச் சேர்ந்த தாய் சரண்யா, மகன் மிதுன் உயிரிழப்பு 

Breaking LIVE: அரசுப்பேருந்து விபத்தில் 6 பேர் பலி - ஓட்டுநர் சிக்கினார்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்புக்கு காரணமான கடலூரைச் சேர்ந்த ஓட்டுநர் முரளியை  அச்சரப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்

Background

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். 


அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மூவலூர்‌ ராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கப்பட உள்ளது.  அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதேபோல் தொழில்நுட்பக்‌ கல்வி, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்வி இளநிலை பயிலும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இத்திட்டத்தினை செயல்படுத்த ஏதுவாக, https://penkalvi.tn.gov.in/ என்ற முகவரியில்‌ இணைய தளம்‌ தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் பதிவு செய்து உள் நுழையலாம். முன்னதாக இணைய தளத்தில்‌, இத்திட்டத்தில்‌ பயன்பெறும்‌ மாணவியர்களின்‌ விவரங்களை 25.06.2022 முதல்‌ 30.06.2022க்குள்‌ சிறப்பு முகாம்கள்‌ ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக அந்த இணையதளத்தில்‌ பதிவிடப்பட வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.இத்திட்டத்திற்கென இளநிலை பயிலும்‌ மாணவியரிடமிருந்து அவர்களது சுய விவரங்கள்‌, வங்கிக்‌ கணக்கு விவரங்கள்‌ மற்றும்‌ பயின்ற அரசு பள்ளி விவரங்கள்‌ பெறப்பட்டு வந்தன.


இதனிடையே மாணவிகள் வேண்டுகோளை ஏற்று உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாணவிகள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யக் கால அவகாசம் ஜூலை 10 ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்று விண்ணப்பங்களை தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதுவரை இந்த திட்டத்தில்  2.8 லட்சம் மாணவிகள் விண்ணப்பத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மாணவிகள்‌ எந்தெந்த ஆவண நகல்களைக் கொண்டுவர வேண்டும்?


1. ஆதார்‌ நகல்‌,
2. வங்கி கணக்குப் புத்தக நகல்‌,
3. பத்து மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ பட்டியல்‌ நகல்‌,
4. பள்ளி மாற்றுச்‌ சான்றிதழ்‌ நகல்‌.
5.சுய விவரங்கள்‌, 
6.வங்கிக்‌ கணக்கு விவரங்கள்.


இவ்வாறு உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.