தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 


கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி,தேனி, கரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை கனமழை பெய்யலாம் என்று வானிலை முனெச்சரிக்கை தகவல் தெரிவித்துள்ளக்து. 






சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் இடி, மின்னலுடன் கன மழை பெய்யலாம் என்று கணித்துள்ளது. 






தமிழ்நாட்டில் சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அசானி புயல் காரணமாக இரண்டு நாட்களுக்கும் மேலாக மழை பெய்தது.  அசானி புயல் காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றிக ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்தது. 






வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த அசான் புயல் நேற்று வலுவிழந்த நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில், கொட்டித் தீர்த்த மழையால் வெப்பம் தணிந்தது. 


வங்கக்கடலில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சென்னை உள்ளிட்ட11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர்,சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையன் தெரிவித்துள்ளது.