TN Weather Update: சென்னையில் கொளுத்தும் வெயில், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? இன்றைய தமிழக வானிலை
TN weather Rain Update: (14-05-2026): கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

TN weather Rain Update: (14-05-2026): கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தலைநகர் சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்படுகிறது.
சுட்டெரிக்கும் வெயில் - வானிலை எச்சரிக்கை
கோடை வெயில் பொதுமக்களை சுட்டெரித்து வாட்டி வதைக்கிறது. அத்தியாவசிய பணிகளுக்காக கூட, நண்பகல் நேரங்களில் வெளியே வர பொதுமக்கள் தயங்குகின்றனர். அதேநேரம், அவ்வப்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது வெயிலின் தாக்கத்தை குறைத்து குளிர்ச்சியான சூழலை உருவாக்குகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “ தென்மேற்கு பருவமழை தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில் 16 ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
அதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை:
15-05-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
16-05-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
14-05-2026 முதல் 17-05-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. வரும் 17ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்:
14-05-2026: அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” எனவே அப்பகுதிகளுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டுமென வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















