தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

Continues below advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் நாளை(11-12-25) எங்கெல்லாம் மின் தடை.?

திருச்சி

புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி, நெய்கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாவுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன்பேட்டை ஆகிய இடங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

கோவை

பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

சிப்காட் பெருந்துறை, பவானி ரோடு, சிலட்டாநகர், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலபாளையம், திருவாச்சி, கந்தம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம், மேல்திண்டல், கீழ்தண்டல், சக்திநகர், செல்வம் நகர், பழையபாளையம், சுதானந்தன்வீதி, லட்சுமி கார்டன், வீரப்பமாபாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கடம்பாளையம், வாலிபுரத்தான்பாளையம் ஆகிய இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

திருப்பூர்

பழங்கரை துணை மின் நிலையத்தைச் சேர்ந்த அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதுார், தங்கம் கார்டன், விஸ்வபாரதி பார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீ ராம் நகர் ,நல்லிக் கவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதுார் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ. ஆபீஸ் பகுதி, கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாஜலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி. நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர். நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர் மற்றும் தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் தடை இருக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்

பள்ளபட்டி, 3 ரோடு, போடிநாயக்கன்பட்டி, திருவகவுண்டனூர் புறவழிச்சாலை, அம்மாச்சி நகர், சுந்தரம் காலனி புதிய பேருந்து நிலையம், கோகுலம் மருத்துவமனை, தெற்கு ஆலாபுரம், ஸ்வர்ணபுரி, 5 ரோடு, ஸீட் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, அரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி, கூலமாடு, கிருஷ்ணபுரம், மண்மலை, கொண்டயம்பள்ளி ஆகிய இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

தர்மபுரி

ராமியனஹள்ளி, சிந்தல்பட்டி, பூதநத்தம், நாவலை, ஆண்டிப்பட்டி, ராமபுரம், கடத்தூர், ரேகடஹள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, நத்தமேடு ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.