TN Power Shutdown: மக்களே தயாராகுங்கள்!கோவை, சேலம், உடுமலைப்பேட்டை உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(10-12-25) மின் தடை
TN Power Shutdown: மின்சார பராமரிப்பு பணிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் காரணமாக நாளை (10.12.2025) முக்கிய மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
நாளை(10-12-25) எங்கெல்லாம் விடுமுறை?
கோவை:
மத்தம்பாளையம்
பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை.
மில் கோவில்பாளையம்
செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம்
தேவனாம்பாளையம்
வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கபாலங்கரை ஒரு பகுதி, எம்மேகவுண்டம்பாளையம், செரிபாளையம், ஆண்டிபாளையம்
சேலம்
மேட்டூர், ஆர்.எஸ்., மேச்சேரி, மல்லியக்கரை, உடையாப்பட்டி , மேட்டுப்பட்டி, கருப்பூர் , ஆடையூர்
உடுமலைப்பேட்டை
கொத்தமங்கலம்,பொன்னாரி, வெள்ளியம்பாளையம்,ஐயம்பாளையம்,குமாரபாளையம்,வரதராஜபுரம்,முருங்கம்பட்டி, சுங்கரமடகு,குடிமங்கலம்
தர்மபுரி
மாம்பட்டி, அனுமந்தீர்த்தம், கைலாயபுரம், கேல்மொரப்பூர், கணபதிபட்டி, சொக்கம்பட்டி, கீரைப்பட்டி, வேப்பம்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி, பெரியபட்டி, குத்தாடிப்பட்டி, கோட்டைப்பட்டி, மாவேரிப்பட்டி
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.






















