தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.

Continues below advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

நாளைய(26-11-25) மின் தடை:

கோவை:

குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி, யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சோமையம்பாளையம், அகர்வால் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, கே. என்.ஜி.புதூர், பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம், கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்

Continues below advertisement

திருப்பூர்

உடுமலை பகுதியில் அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி

திருச்சி 

 நாகம்மையார் தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்தி நகர், பூவாளூர், பின்னவாசல், தென்கால், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, மேட்டங்காடு, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்களம், ஆனந்திமேடு, அன்பில், கீழ் அன்பில், ஜங்கமாராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திகால், அம்மன் நகர், காட்டூர், இராமநாதபுரம், கொத்தமங்களம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூர், பெருவளநல்லூர், இடக்கிமங்களம், நஞ்சைசங்கேந்தி, புஞ்சைசங்கேந்தி மற்றும் இருதயபுரம்

கடலூர் 

ஸ்ரீமுஷ்ணம், ஆதிவராகநல்லூர், நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனூர், இணமங்கலம், நாச்சியார்பேட்டை, அக்ரஹாரம், குணமங்கலம், பூண்டி, ஸ்ரீபுத்தூர், எசனூர், கள்ளிப்பாடி, அம்புஜவல்லிபேட்டை, ராஜேந்திரப்பட்டிணம், வேட்டக்குடி, டி.வி.புத்தூர், ஓலையூர், ஆத்துக்குறிச்சி, விழுதுடையான், சின்னாத்துக்குறிச்சி

திருவாரூர்

சிமிழி, சேதினிபுரம், காங்கேய நகரம், திருவிடைசேரி, மணலகரம்

நாமக்கல் 

ஜோடார்பாளையம், வடகரையாத்தூர், காளிப்பாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகப்பாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டன்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம்

சேலம் 

தொப்பூர் பகுதிகளான செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுக்குளி, தளவாய்ப்பட்டி, எலத்தூர், சென்னாரெட்டியூர், கொண்ரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, சோழியானூர். மேலும் பேளூர் பகுதியில் குறிச்சி, சின்னமநாயக்கன்பாளையம், புழுதிகுட்டை, சந்தமலை, பெலாப்பாடி, செக்கடிப்பட்டி, வெள்ளாளப்பட்டி, தாண்டானூர், ரெங்கனூர், கனுக்கானூர், சின்னவேலாம்பட்டி, கோனஞ்செட்டியூர், பெரியகுட்டிமடுவு