மேலும் அறிய

மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ. 6,500 கோடி நிதி உண்டு; பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ. 240 கோடி இல்லையா? - திமுக அரசுக்குச் செந்தில்குமார் கேள்வி!

மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ. 6,500 கோடி நிதி உண்டு, பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ. 240 கோடி இல்லையா? என திமுக அரசுக்குச் ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் சுமார் 12,000 பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட்டில் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

தேர்தல் வாக்குறுதி 181: முதல்வர் நிறைவேற்றுவாரா?

கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களின் போதும், திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தது (வாக்குறுதி எண்: 181). ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் முடியப் போகும் நிலையில், இந்த வாக்குறுதி காகித அளவிலேயே இருப்பதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

"மகளிர் உரிமைத் தொகைக்காக ரூ. 6,500 கோடி நிதியை முன்கூட்டியே ஒதுக்கீடு செய்ய முடிகிற அரசால், 12,000 ஆசிரியர்களின் வாழ்வை மேம்படுத்த வெறும் ரூ. 240 கோடி நிதியை ஒதுக்க முடியாதா?" என செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சம வேலைக்கு சம ஊதியம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்

உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி ஆகிய பாடங்களை நடத்தும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும், அதே பாடங்களை நடத்தும் சிறப்பாசிரியர்களுக்கும் இடையே மிகப்பெரிய ஊதிய வேறுபாடு நிலவுகிறது.

*சிறப்பாசிரியர்கள்: அடிப்படை ஊதியம் ரூ. 20,600-ருடன் காலமுறைச் சம்பளம் பெறுகின்றனர்.

* பகுதிநேர ஆசிரியர்கள்: தற்போது ரூ. 12,500 மட்டுமே தொகுப்பூதியமாகப் பெறுகின்றனர்.

இது குறித்து செந்தில்குமார் கூறுகையில், "இந்திய அரசியலமைப்பு விதி 141-ன் படி 'சம வேலைக்கு சம ஊதியம்' என்பது அடிப்படை உரிமை. தற்காலிக ஊழியராக இருந்தாலும், அவர்கள் செய்யும் வேலை சமமாக இருக்கும்போது ஊதியமும் சமமாகவே இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.காதர் மற்றும் எஸ்.ஏ.போப்டே அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது," என்றார்.

மேலும், சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநில வழக்கில் நீதிபதி பங்கஜ் மிட்டல் வழங்கிய தீர்ப்பையும் சுட்டிக்காட்டிய அவர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டியது அரசின் கடமை என்பதை வலியுறுத்தினார்.

15 ஆண்டுகாலப் போராட்டம்

கடந்த 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி, சட்டசபை விதி 110-ன் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அப்போதிருந்து கடந்த 15 ஆண்டுகளாக மிகக் குறைந்த ஊதியத்தில் இவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

சமீபத்தில் தமிழக முதல்வர், பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ. 2,500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ஆசிரியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "ரூ. 2,500 உயர்வு பெற்று மொத்தம் ரூ. 15,000 வாங்குவதால் இந்த விலைவாசி உயர்வில் வாழ்வாதாரம் எப்படி மேம்படும்? எங்களுக்குத் தேவை ஊதிய உயர்வு அல்ல, பணி நிரந்தரம் மட்டுமே" என ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

முக்கிய கோரிக்கைகள்

* பணி நிரந்தரம்: 12,000 பகுதிநேர ஆசிரியர்களையும் காலமுறைச் சம்பளத்தில் 'சிறப்பாசிரியர்களாக' பணியமர்த்த வேண்டும்.

* நிதி ஒதுக்கீடு: இடைக்கால பட்ஜெட்டில் இவர்களுக்காகத் தேவையான ரூ. 240 கோடி நிதியை ஒதுக்கி, தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்ற வேண்டும்.

*அடிப்படை ஊதியம்: சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல ரூ. 20,600 அடிப்படை ஊதியத்துடன் கூடிய காலமுறைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

"தமிழக முதல்வர் மகளிர் உரிமைத் தொகைக்கு காட்டிய அதே அக்கறையை, கல்விப் பணியில் 15 ஆண்டுகளைத் தொலைத்த பகுதிநேர ஆசிரியர்களிடமும் காட்ட வேண்டும். பிப்ரவரி 17 பட்ஜெட் அறிவிப்பு எங்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக அமைய வேண்டும்," என செந்தில்குமார் தனது அறிக்கையில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம்! ”பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்க” அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
மானாமதுரை இளைஞர் மரணம்! ”பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்க” அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
Rahul Gandhi: கேட்டதே கிடைக்கல? ப.சிதம்பரம் மீது கடும் அப்செட்டில் ராகுல் காந்தி - ஏன்?
Rahul Gandhi: கேட்டதே கிடைக்கல? ப.சிதம்பரம் மீது கடும் அப்செட்டில் ராகுல் காந்தி - ஏன்?
பாஜகவுடன் முதல்வர் மறைமுக கூட்டணி.. ராகுல் காந்தி பேச்சுக்கு மதுரை எம்பி கடும் விமர்சனம்
பாஜகவுடன் முதல்வர் மறைமுக கூட்டணி.. ராகுல் காந்தி பேச்சுக்கு மதுரை எம்பி கடும் விமர்சனம்
விஜய் நேர்காணல்: தவெக வேட்பாளர்கள் எதிர்பார்ப்பு! விஜய் எங்கு போட்டியிடுகிறார்? பரபரப்பு தகவல்!
விஜய் நேர்காணல்: தவெக வேட்பாளர்கள் எதிர்பார்ப்பு! விஜய் எங்கு போட்டியிடுகிறார்? பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்" ஆனால், இந்தியா... எச்சரிக்கும் ஈரான் தலைவர்
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
Embed widget