TN Assembly Session LIVE: ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முடிவு கட்டப்படும் - சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
TN Assembly Session 2022 LIVE Updates: தமிழ்நாடு குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதுதொடர்பான, அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.
நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்க நாளை மறுநாள் சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தப் போவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
பக்தர்கள் சிவலோகமும் வைகுண்டத்திற்கும் செல்ல வேண்டுமென விரும்பினால், அதற்கு அமைச்சர் சேகர்பாபு வழி காட்டுவார் என பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு தெரிவித்தார்.
முன்னதாக, சேலம் வைகுண்டம் இடையே சாலை அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். அப்போது, குறுக்கிட்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஒ.பன்னீர்செல்வம், வைகுண்டத்தில் சாலை அமைக்க கிருஷ்ண பரமாத்மாவிடம் அனுமதி பெறப்பட்டு விட்டதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார்.
கீழ்வேளூர் தொகுதியில் திருப்பூண்டி அருகே உள்ள கீரனேரி ஏரியை ஆழப்படுத்த வேண்டும் என்ற கீழ்வேளூர் தொகுதி உறுப்பினர் நாகை மாலி-யின் கோரிக்கை ஏற்கப்படுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் போதுமான கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார். ஒட்டப்பிடாரத்தில் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படுமா? என்று உறுப்பினர் சண்முகையா எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
சட்டப்பேரவை கூட்டத்தின் இரண்டாவது நாள் கலைவாணர் அரங்கில் சற்றுமுன் தொடங்கியது.மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு பேரவையில் இறங்கற்குறிப்பு வாசிக்கப்பட்டது.
பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்; இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் அறிவிப்பு இல்லாத இந்த ஆளுநர் உரை ஏமாற்றமளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்
நேற்று, ஆளுநர் தனது உரையில்," தெற்காசியாவிலேயே முதலீடுக்கு உகந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழகம் அடுத்த பத்தாண்டுகளுக்குள் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும். புதிய சுற்றுலாக் கொள்கை வெளியிடப்படும். சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு நீண்டகால நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
சப்பபேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதற்கான விவாதம் நடைபெறும்.
மேலும், சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கற் குறிப்புகள் வாசிக்கப்படும்.
அதேபோன்று,
(I) டாக்டர் கோ. ரோசய்யா, தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் அவர்களின் மறைவு குறித்து.
(II) இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, குரூப் கேப்டன் வருண் சிங் மற்றும் 11 இராணுவ உயர் அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது குறித்து.
(III) வே. துரைமாணிக்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அவர்களின் மறைவு குறித்து.
(iv) புனீத் ராஜ்குமார், பிரபல கன்னட திரைப்பட நடிகர் அவர்களின் மறைவு குறித்து.
(v) பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, மனித உரிமைச் செயற்பாட்டாளர் அவர்களின் மறைவு குறித்து.
இரங்கல் தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்படுகிறது.
Background
TN Assembly Session 2022 LIVE Updates:
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. தமிழகத்தின் பொருளாதாரம் அடுத்த 8 ஆண்டுகளுக்குள், ஒரு லட்சம் கோடி டாலர் என்ற இலக்கை எட்ட வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படாதது, அஇஅதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட மினி கிளினிக்குகளை மூடியது ஆகியவற்றை கண்டித்து வெளிநடப்பு செய்ததாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக வெளிநடப்பில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -