Minister Ramesh: வாட்ஸ்அப் மூலம் தரிசனம் முன்பதிவு.. கோயிலில் வரப்போகும் மாற்றம்.. அமைச்சர் அறிவிப்பு!
நாங்கள் ஆன்லைன் முன்பதிவு விஷயத்தில் புதிதாக செய்கிறோம் என சொல்லவில்லை. ஏற்கனவே உள்ளதை அப்டேட் செய்கிறோம். இணையதளம் பயன்படுத்த தெரியாதவர்களுக்கு கோயில் கவுண்டர்களில் டோக்கன் வழங்கப்படும் என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

மக்கள் மன நிம்மதியுடன் வந்து கடவுளை வணங்கும் இடமாக கோயில்கள் மாற்றப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கோயிலில் ஊழலை ஒழிக்க வேண்டும்
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரமேஷிடம், ஏற்கனவே கோயிலில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் நிலையில் நீங்கள் ஆன்லைன் முன்பதிவு தரிசனம் பற்றி சொல்கிறீர்களே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “கோயில்களில் கடந்த கால ஆட்சிகளில் இலவச தரிசனம், கட்டண தரிசனம் ஆகியவை இருக்கிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும். முதலில் கோயில்களுக்கும் வரும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது மற்றும் இத்தகைய தரிசன டோக்கன்களை வைத்து நடைபெறும் பல்வேறு விதமான ஊழலை ஒழிக்க வேண்டும். போலி டோக்கன்கள், கமிஷன் வாங்கி கொண்டு விரைவு தரிசனம் செய்ய அனுமதிப்பது போன்றவை அறவே தடுக்கப்பட வேண்டும்.
இன்றைக்கு கோயில்களில் இலவச தரிசனம், கட்டண தரிசனம் வழியாக மக்கள் நீண்ட நேரம் கால்கடுக்க வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால் யாரோ ஒருவரிடம் பணத்தைப் கொடுத்து சாமியை நேரடியாக பார்க்க செல்கிறார்கள். இதனால் இந்த வரிசையில் கால்கடுக்க நிற்கும் மக்களுக்கு மனநிலை, மனவலியை நாம் நிச்சயமாக புரிந்துக் கொள்ள வேண்டும். இதற்கான திட்டம் தயாரானவுடன் முதலமைச்சர் விஜயிடம் ஒப்புதல் பெற்று அமல்படுத்தப்படும்” என கூறினார்.
கோயில்கள் தூய்மைப்படுத்தப்படும்
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரமேஷ், “நாங்கள் ஆன்லைன் முன்பதிவு விஷயத்தில் புதிதாக செய்கிறோம் என சொல்லவில்லை. ஏற்கனவே உள்ளதை அப்டேட் செய்கிறோம். இணையதளம் பயன்படுத்த தெரியாதவர்களுக்கு கோயில் கவுண்டர்களில் டோக்கன் வழங்கப்படும். அதற்கான தனியார் ஏஜென்ட்கள் என இல்லாமல் அறநிலையத்துறை ஊழியர்களை கொண்டு இது நடைமுறைப்படுத்தப்படும். இதனால் அனைத்தும் எனது கண்ட்ரோலில் தான் இருக்கும்.
இதில் ஒருவரே அதிகமாக டிக்கெட் புக் பண்ணுவது போன்றில்லாமல் முழுக்க முழுக்க மக்கள் பயன்பாட்டிற்காக இருக்கும். இன்னும் எளிதாக வாட்ஸ்அப் மூலம் புக் பண்ணுவது பற்றியும் யோசித்து வருகிறோம். முதற்கட்டமாக சில கோயில்களில் சோதனை அடிப்படையில் இதனை செயல்படுத்தவுள்ளோம். அதில் வரும் கருத்துகள் அடிப்படையில் பெரிய பெரிய கோயில்களில் அமல்படுத்தப்படும். தமிழ்நாடு முழுக்க இதனைக் கொண்டு வருவதற்காக சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.
Also Read: ஒரு மேயரை தவெக பெற்றால் ஒருபக்க மீசையை எடுப்பேன்.. ஆர்.எஸ்.பாரதி சவால்.. அமைச்சரின் ரியாக்ஷன்!
இந்து சமய அறநிலையத்துறையில் நடந்துள்ள முறைகேட்டை மக்கள் முன்னிலையில் கொண்டு வருவேன். அதில் எப்பேர்ப்பட்ட நபர்கள் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கோயில்களில் ரகசிய ஆய்வு என்பது தொடரும். கோயில்கள் தூய்மையாக்கப்படும். மக்கள் மன நிம்மதியுடன் வந்து சென்று கடவுளை வணங்கி செல்லும் இடமாக மாற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.
Before You Go
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு"திமுக vs பாஜக மாறி மாறி கோஷம்.. ரயில் நிலையத்தில் பரபரப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்






















