மேலும் அறிய

TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?

TN Govt Vettri Payanam: தமிழ்நாடு அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தால் ஆண்களுக்கான பேருந்து கட்டணமும் குறைந்து இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TN Govt Vettri Payanam: தமிழ்நாடு அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தால் ஆண்களுக்கான பேருந்து கட்டணம், 3 ரூபாய் வரையில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் வெற்றிப் பயணம் திட்டம்:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் வெற்றிப்பயணம் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள 7 போக்குவரத்துக் கழகங்களின் மாநகர், நகர்புற சாதாரணப் பேருந்துகள் மற்றும் மலைப் பகுதிகளில் 40 கி.மீ. வரை மட்டுமே மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்துவந்த நிலையில், இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  மாநகர, நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகள், புறநகர் சாதாரணப் பேருந்துகள் (Mofussil Ordinary) மற்றும் 40 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் (Ghat Ordinary) உட்பட மொத்தமாக 12,695 பேருந்துகளில் மகளிர் கட்டமின்றி பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு அடித்த ஜாக்பாட் 

இதனிடையே, யாரும் எதிர்பாராத விதமாக வெற்றிப் பயணம் திட்டம் வாயிலாக ஆண்களுக்கான பேருந்து கட்டணங்களும் குறைந்து இருப்பது பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதற்கு பேருந்துகளின் வகைப்பாடு மாற்றப்பட்டதே காரணமாக கூறப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் 3 ரூபாய் தொடங்கி அதிகபட்சமாக 12 ரூபாய் வரையில் பேருந்து கட்டணம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஒரே திட்டத்தால் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கான பயண செலவையும் அரசு குறைத்துள்ளதாக ஒரு தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

பேருந்து கட்டணம் குறைய காரணம் என்ன?

இதுகுறித்து பேசிய நெல்லை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், “அரசு போக்குவரத்து துறையில் இடைநிற்றல் இல்லாத பேருந்துகள், விரைவு பேருந்துகள், சாதாரண பேருந்துகள், தாழ்தள சொகுசு பேருந்துகள் மற்றும் டவுன் பேருந்துகள் என்ற வகைப்பாட்டில் இயக்கப்படுகின்றன.  இதில் பெண்களுக்கு வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சேவைகளை வழங்க பணிகளை தொடங்கியபோது, சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. எனவே அவற்றின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் பல்வேறு விரைவு பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக வகைப்படுத்தப்பட்டன. அதன் விளைவாகவே சில பேருந்துகளில் ஆண்களுக்கான கட்டணம் என்பது குறைந்துள்ளது. அதேநேரம், விரைவு பேருந்துகள் மற்றும் இடைநிற்றல் இல்லாத பேருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் இன்றி திகழ்கிறது.

இதையும் படியுங்கள்: Nana Padekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்

12 ரூபாய் வரையில் குறைந்த டிக்கெட் கட்டணம்:

  • உதாரணமாக, நெல்லையிலிருந்து திருச்சி பயணத்திற்கு 50 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 38 ரூபாயாக குறைந்துள்ளது. மேலும் நெல்லை - தூத்துக்குடி இடையே இடைநிற்றல் இல்லாத பேருந்து டிக்கெட் கட்டணம் 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. விரைவுப் பேருந்துகளில் 40 ரூபாயும், சாதாரண பேருந்துகளில் 35 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
  • வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 128 பேருந்துகள் வெற்றிப்பயணம் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண்களுக்கான பேருந்து கட்டணம் 10 ரூபாயிலிருந்து 7 ரூபாயாக குறைந்துள்ளது.
  • குமரி மாவட்டத்தில் களியக்காவிளை, மார்த்தாண்டம், கன்னியாகுமரி போன்ற பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் 65 பேருந்துகளில் ஆண்களுக்கான டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளது.
  • திருச்சியில் இருந்து துறையூருக்கு வழக்கமாக இயக்கப்படும் விரைவு பேருந்துகளில் 40 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது வெற்றிப் பயண பேருந்துகளில் 30 ரூபாயாக குறைந்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை ஓணான் கரடு மலையில் கல் குவாரிக்கு தடை: தொல்லியல் எச்சங்கள் பாதுகாக்க உத்தரவு!
மதுரை ஓணான் கரடு மலையில் கல் குவாரிக்கு தடை: தொல்லியல் எச்சங்கள் பாதுகாக்க உத்தரவு!
உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ரூ.7.65 லட்சம் பறிமுதல், நில முறைகேடு அம்பலம்!
உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: ரூ.7.65 லட்சம் பறிமுதல், நில முறைகேடு அம்பலம்!
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா? அப்போ இந்த ஸ்பெஷல் ட்ரெயினை மிஸ் பண்ணிடாதீங்க!
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல திட்டமா? அப்போ இந்த ஸ்பெஷல் ட்ரெயினை மிஸ் பண்ணிடாதீங்க!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
கடவுள் மறுப்புக் கொள்கையில் இரட்டை வேடமா? வேதங்கள் முழங்க நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
Asia Cup: இந்திய அணியின் துணை கேப்டனான ரஜத் படிதார்! ஆசிய கோப்பைக்கு களமிறங்கும் மாஸ் டீம்! யார்? யாரு?
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
ரயிலில் பட்டாசு கொண்டு போனா 3 வருஷம் ஜெயில்! ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் விடுவிப்பு - மொத்தமாக ரூ.167.12 கோடி வரவுவைப்பு!
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
KN Nehru Case: கைவிட்ட உச்சநீதிமன்றம்.. அன்பில் மகேஷை தொடர்ந்து கே.என்.நேரு கைதாகிறார்?
Hyundai Offers: தீபாவளி டமாக்கா! ரூபாய் 1.20 லட்சம் ஆஃபரை அள்ளித்தெளித்த ஹுண்டாய்! எந்த காருக்கு எவ்ளோ?

Embed widget