2026 Govt. Holidays: மக்களே நோட் பண்ணிக்கோங்க.. 2026-ல் இத்தனை நாட்கள் அரசு விடுமுறையா.? ஜாலிதான் போங்க.!
2026-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது தெரியுமா.? பாருங்கள்...

தமிழ்நாடு அரசு 2026-ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலை தற்போது காணலாம்.
2026-ல் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் ஆண்டில் புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம், தைப்பூசம், ரம்ஜான், புனித வெள்ளி, சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட முக்கியப் பண்டிகைகள் உட்பட மொத்தம் 24 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1. புத்தாண்டு தினம் 01.01.2026 - வியாழன்
2. பொங்கல் தினம் 15.01.2026 - வியாழன்
3. திருவள்ளுவர் தினம் 16.01.2026 - வெள்ளிக்கிழமை
4. உழவர் திருநாள் 17.01.2026 - சனிக்கிழமை
5. குடியரசு தினம் 26.01.2026 - திங்கள்
6. தைப்பூசம் 01.02.2026 - ஞாயிறு
7. தெலுங்கு புத்தாண்டு தினம் 19.03.2026 - வியாழன்
8. ரம்ஜான்[இதுல் பித்ர்) 21.03.2026 - சனிக்கிழமை
9. மகாவீர் ஜெயந்தி 31.03.2026 - செவ்வாய்
10. வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கான வருடாந்திர கணக்குகள் மூடல் 01.04.2026 - புதன்கிழமை
11. புனித வெள்ளி 03.04.2026 - வெள்ளிக்கிழமை
12. தமிழ் புத்தாண்டு தினம்/டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள் 14.04.2026 - செவ்வாய்
13. மே தினம் 01.05.2026 - வெள்ளிக்கிழமை
14. பக்ரீத் (இதுல் அழ்ஹா) 28.05.2026 - வியாழன்
15. முஹர்ரம் (யாம்-இ-ஷஹாதத்) 26.06.2026 - வெள்ளிக்கிழமை
16. சுதந்திர தினம் 15.08.2026 - சனிக்கிழமை
17. மிலாதுன் நபி (நபி பிறந்தநாள்) 26.08.2026 - புதன்கிழமை
18. கிருஷ்ண ஜெயந்தி 04.09.2026 - வெள்ளிக்கிழமை
19. விநாயகர் சதுர்த்தி 14.09.2026 - திங்கள்
20. காந்தி ஜெயந்தி 02.10.2026 - வெள்ளிக்கிழமை
21. ஆயுத பூஜை 19.10.2026 - திங்கள்
22. விஜய தசமி 20.10.2026 - செவ்வாய்
23. தீபாவளி 08.11.2026 - ஞாயிற்றுக்கிழமை
24. கிறிஸ்துமஸ் 25.12.2026 - வெள்ளிக்கிழமை
இதில், 01.04.2026 அன்று குறிப்பிடப்பட்டுள்ள விடுமுறை, தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 24 பொது விடுமுறை நாட்களில், தைப்பூசம் (பிப்ரவரி 1) மற்றும் தீபாவளி (நவம்பர் 8) ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே ஞாயிற்றுக் கிழமைகளில் வருகின்றன. இந்த 24 நாட்களைத் தவிர, வழக்கமான அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் விடுமுறையாகக் கருதப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.





















