சிறுவர்களுக்கு மதுபானம் விற்பனை.. அரசுக்கு பறந்த புகார்.. 11 டூ 11 பார்களுக்கு அதிரடி உத்தரவு!
போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகளை விஜய் மூடினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட தனியார் மனமகிழ் மன்றங்கள் மற்றும் தனியார் ஹோட்டல்களில் செயல்படும் பார்களில் எக்காரணம் கொண்டும் 21 வயதிற்குக் குறைவான நபர்களுக்கு மதுபானம் விற்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான மற்றும் சமூகப் பொறுப்புணர்வு மிக்க சூழலை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள், 1981-ன் கீழ் உரிமம் பெற்ற அனைத்து FL2 (மனமகிழ் மன்றங்கள்) மற்றும் FL3 (நட்சத்திர ஹோட்டல்களின் பார்கள்) வளாகங்களிலும் பின்வரும் அறிவுறுத்தல்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானம் விற்பனைக்கூடாது
அதன்படி 21 வயதிற்குக் குறைவான எந்த நபருக்கும் மதுபானம் விற்கப்படவோ, வழங்கப்படவோ கூடாது. சம்பந்தப்பட்ட நபரின் வயது குறித்து சந்தேகம் இருப்பின் மதுபானம் வழங்குவதற்கு முன் அவரின் வயதிற்கான செல்லுபடியாகும் ஆவணச் சான்றுகள் சரிபார்க்கப்பட வேண்டும். மேலும் அனைத்து FL2 உரிமம் பெற்ற கிளப்புகளும் தங்களது பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அவர்களது தகுதியுடைய விருந்தினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும்.
FL2 மற்றும் FL3 பார்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு நோங்கள் அந்தவித விலகலும் இன்றி கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
FL2 உரிமம் பெற்ற கிளப்புகளில், பார் செயல்பாடு அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும். கிளப் நிர்வாகங்கள். கிளப் நிறுவப்பட்ட நோக்கங்களுக்கு ஏற்ப பிற பொழுதுபோக்கு, கலாச்சார, விளையாட்டு மற்றும் சமூகச் செயல்பாடுகள் தொடர்ந்து மற்றும் பயனுள்ளதாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
Also Read: DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
மேற்கண்ட அறிவுறுத்தல்களை அனைத்து உரிமதாரர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 193 அதன் கீழ் இயற்றப்பட்ட விதிமுறைகள் அல்லது உரிம நிபந்தனைகள் ஆகியவற்றின் ஏதேனும் மீறல்கள் மிகவும் தீவிரமாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜயின் அதிரடி நடவடிக்கை
போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் 717 டாஸ்மாக் கடைகளை விஜய் மூடினார். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்கும் வகையில் அதிரடி சோதனை நடந்து வருகிறது. இப்படியான நிலையில் டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















