Market Guideline Values : அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு.! பதிவுத்துறை அதிரடி உத்தரவு
Land And Properties : அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

பத்திர பதிவுத்துறை ஆய்வு
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையில், அமைச்சர்கள் தங்கள் துறையின் கீழ் உள்ள பணிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த வகையில் பத்திர பதிவுத்துறையில் கிடப்பில் உள்ள திட்டங்கள் தொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் இன்று செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து துணை பதிவுத்துறைத் தலைவர்கள், அனைத்து உதவிப் பதிவுத்துறைத் தலைவர்கள் அனைத்து மாவட்டப் பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை) மற்றும் உதவி செயற்பொறியாளர்களின் பணித்திறன் குறித்த முதல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
புகாருக்கு இடமளிக்க கூடாது
இக்கூட்டத்தில் பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளுமாறும், பொதுமக்களை அலுவலகத்தில் அமரவைத்தும், அவர்களுடைய தேவைகளை சரிவர பூர்த்தி செய்தும், தாமதம் இன்றி அன்றைய தினமே ஆவணங்களை பொதுமக்களிடம் திரும்ப வழங்குமாறும். அவர்களுக்கு பதிவு சம்மந்தமாக எழும் சந்தேகங்களை உடனுக்குடன் புரியும்படியும் பொறுமையுடனும் எடுத்துக்கூறுமாறும், எவ்வித புகாருக்கும் இடமளிக்காமலும் செயல்படுமாறும் மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கட்டிட களப்பணிக்காக ஆவணங்களை தாமதமில்லாமல் உடனுக்குடன் பார்வையிட்டு வழங்கப்படவேண்டும் எனவும், திரும்ப ஆவணங்களை ஆவணதாரர்களுக்கு நிலுவை மாவட்டப்பதிவாளர்கள் ஆய்வு செய்து உடனுக்குடன் உரிய தீர்வு அளித்திட வேண்டும்.
சந்தை வழிகாட்டி மதிப்பு
நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கினை அடைந்திட அனைத்து முயற்சிகளையும் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும். அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும்,
தேவையில்லாத காரணங்களுக்காக ஆவணங்களை நிலுவை வைத்து பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது எனவும், பதிவுக்கு தேவைப்படும் ஆவணங்களை சரிபார்த்து பதிவு செய்து வழங்குமாறும், 2026-2027 ஆம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கினை அடைய துரிதமாக செயல்படுமாறும், முழுமையான அர்ப்பணிப்புடனும் முழு ஈடுபாடுடனும் தன்னலமற்று பணியாற்றுமாறும் அமைச்சர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டது.
Before You Go
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















