Ration Shop : நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! யார் யாருக்கெல்லாம்.? தேதி அறிவித்த தமிழக அரசு
Ration Shop : செப்டம்பர் 5, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ரேஷன் கடையில் உணவுப்பொருட்கள்
ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் சுமார் 2 கோடிக்கும் மேலான ரேஷன் கார்டுகளுக்கு அரிசி, சக்கரை, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விநியோகம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரம் முதியவர்கள் ரேஷன் கடைக்கு சென்று நீண்ட நேரம் நின்று பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
முதியோர்களுக்கு வீடு தேடி உணவுப்பொருட்கள்
இதனால் முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று உணவுப்பொருட்களை வழங்கும் திட்டத்தை கடந்த திமுக ஆட்சி காலத்தில் தாயுமாணவர் திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த திட்டமானது தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்
இந்நிலையில், செப்டம்பர் மாதத்தின் 5, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சிதம்பரனார், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், இராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 1,346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இத்திட்டத்தைத் தவறாமல் பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் நாளை முதல் 3 நாட்களுக்கு உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.
Before You Go
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ட்ரெண்டிங் செய்திகள்






















