சில மாநிலங்களில் குடிசைகளை மறைக்கும் மாடல் ஆட்சி நடைபெறுகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு வருகிறது என்றும், திமுக அரசு மக்கள் நல அரசாக செயல்பட்டு வருகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வீடுகள் என்பது குடும்பத்தின் கனவு, அதை நிறைவேற்ற காரணமாக நாங்கள் இருப்பதில் மகிழ்ச்சி எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில், இந்தியாவிற்கு வந்த பிரிட்டன் பிரதமர் குஜராத்திற்கு வந்தார். அப்போது சாலையின் இரு புறங்களிலும் வெள்ளை துணிகளை கொண்டு குடிசைகள் மறைக்கப்பட்டன. அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
தற்போது, முதலமைச்சர் ஸ்டாலின் சில மாநிலங்களில் குடிசைகளை மறைக்கும் மாடல் ஆட்சி நடைபெறுகிறது என மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில் குஜராத் மாநிலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.