தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று கட்டுக்குள் வந்தபிறகு மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அத்துடன் கடந்த முறை ஆன்லைனில் நடத்தப்பட்ட கல்லூரி தேர்வுகள் இம்முறை நேரடியாக கல்லூரிகள் நடத்தப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மதுரையில் சில கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இந்நிலையில் இந்த வழக்குகள் அனைத்தும் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பெயரில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான ஆணையில், "கடந்த மாதத்தில் ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் மீது மதுரை மாநகரில் 9 வழக்குகள், கள்ளக்குறிச்சி மாவட்டம், சென்னை மற்றும் திருச்சி மாநகரில் தலா ஒரு வழக்கு என தமிழகத்தில் மொத்தம் 12 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.


பணமோசடி புகார்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி


மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்லூரி மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 12 வழக்குகளையும் கைவிட உத்தரவிட்டதின் பேரில், மேற்படி அனைத்து வழக்குகளிலும் தமிழக காவல் துறையினரால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதலமைச்சரின் இந்த உத்தரவிற்கு பலரும் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் மாணவர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு ஆணை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



மேலும் படிக்க: ஓராயிரம் கருணாநிதிகள் வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ அழிக்கவோ முடியாது - சி.வி.சண்முகம் பேச்சு