Ungalil Oruvan Book Release LIVE: முதல்வரின் உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா நேரலை!

MK Stalin Ungalil Oruvan Book Release LIVE Updates: முதல்வரின் ‘உங்களில் ஒருவன் சுயசரிதை நூலை ராகுல்காந்தி இன்று வெளியிடுகிறார். அந்தநிகழ்ச்சி தொடர்பான அப்டேட்டுகளை உடனக்குடன் இங்கு பார்க்கலாம்.

கல்யாணி பாண்டியன் Last Updated: 28 Feb 2022 04:56 PM

Background

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள  ‘உங்களில் ஒருவன் சுயசரிதை நூலை ராகுல்காந்தி இன்று வெளியிடுகிறார். அந்தநிகழ்ச்சி தொடர்பான அப்டேட்டுகளை உடனக்குடன் இங்கு பார்க்கலாம். இந்த நிகழ்ச்சி நந்தம்பாக்கத்தில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றுக்கொண்டிக்கிறது. நிகழ்ச்சி நடக்க இருக்கும் அரங்கு:  நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அரசியல் தலைவர்கள் நிகழ்ச்சி...More

சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!

சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!




கருணாநிதி போல எனக்கு எழுத தெரியாது.. பேசத்தெரியாது.. ஆனால் முயன்று பார்ப்பேன். அதன் வெளிப்பாடுதான் இந்த நூல்


நான் உங்களில் ஒருவன்.. அதை ஸ்டாலின் என்றுமே மறக்க மாட்டேன்.  


சிறுவயதில் இருந்தே அரசியல் எனது இரத்தத்தில் இருந்தது. 


சிறுவயதிலேயே லட்சியம் இன்னதென்று முடிவெடுத்து, அதை நோக்கி சென்றால் வெற்றி நிச்சயம். அதற்கு நான் சான்று 


கலைஞர் நாற்காலியில் நான் உட்காருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.


கோபாலபுரம் இல்லமே என் சரிதையின் வரலாறு. 


எல்லாருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடலின் கோட்பாடு