தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக தமிழக முதல்வர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு:

தமிழக அரசின் தொலைநோக்கு திட்டங்களின் செயலாக்கம் குறித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு , கோவி செழியன், சிவசங்கர் ஆகியோர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  2021 ஆம் ஆண்டை காட்டிலும் 2024-25 ஆகிய ஆண்டுகளில் ஏற்றுமதியானது 52.75 சதவீத மில்லியன் டாலாராக உயர்ந்ததாகவும் 3.28 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்

முதல்வர் ஸ்டாலின் பதிவு:

மேலும் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அவர் வெளியிட்டுள்ள பதிவில் சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம்!  தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், நமது #DravidianModel அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க தரவுகளோடு மாண்புமிகு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.எஸ் சிவசங்கர்மற்றும் கோவிசெழியன்ஆகியோர் விளக்கியுள்ளனர்.  

சொல்லாததையும் செய்திருக்கிறோம்

இன்னும் ஒருபடி மேலே சொன்னால், #CMBreakfastScheme, #NaanMudhalvan, #PudhumaiPenn, #TamilPudhalvan போன்ற இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள் — #ElectionManifesto-வில் குறிப்பிடப்படாதவை!  முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத ஒன்றிய பா.ஜ.க. வன்ம அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்!  Accessibility  Accountability  Transparency  Inclusivity  Responsibility  Sustainability  இதுதான் தி.மு.க.! என்று முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.