மேலும் அறிய

Tamil Nadu Budget 2026: நகைக்கடன், சுய உதவிக்குழு கடன், பயிர் கடன் தள்ளுபடி.! தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய தகவல்

தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன் தொடர்பாக முக்கிய தகவல்களை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக இடைக்கால பட்ஜெட்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில்,  கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், நிதி ஒதுக்கீடு தொடர்பாக தகவல்கள் இடம்பெற்றது. குறிப்பாக மகளிர் உரிமை தொகை, மெட்ரோ ரயில் திட்டம், ஒவ்வொரு துறைகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதிகளை பட்டியலிட்டார். 

பயிர் கடன், நகைக்கடன், சுய உதவிக்குழு கடன்

இதில் முக்கியமாக திமுக அரசு பதவியேற்றதில் இருந்து நகைக்கடன், பயிர் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி தொடர்பாக முக்கிய தகவலை கூறினார். அந்த வகையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் உறுதியளித்தபடி. கூட்டுறவுத் துறையின் மூலம் 12,359 கோடி ரூபாய் பயிர்க்கடனும், 4,889 கோடி ரூபாய் நகைக்கடனும் மற்றும் சுயஉதவிக் குழுக்களின் கடன் 2,118 கோடி ரூபாயும் தள்ளுபடி செய்யப்பட்டன. கடந்த ஐந்தாண்டு காலத்தில், 69.087 கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் உச்சவரம்பு 30 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, கடந்த ஐந்தாண்டுகளில், 252,246 சுயஉதவிக் குழுக்களுக்கு 16.648 கோடி ரூபாய் கடன் கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் மருந்துகள்

பொதுமக்களுக்குத் தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்கும் நோக்கில், 'முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்கப்பட்டு. இதுவரை 26 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், 45 இலட்சம் பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உணவு மானியத்திற்காக 14,000 கோடி ரூபாய் உட்பட, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 17,068 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம்! ”பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்க” அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
மானாமதுரை இளைஞர் மரணம்! ”பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்க” அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
Rahul Gandhi: கேட்டதே கிடைக்கல? ப.சிதம்பரம் மீது கடும் அப்செட்டில் ராகுல் காந்தி - ஏன்?
Rahul Gandhi: கேட்டதே கிடைக்கல? ப.சிதம்பரம் மீது கடும் அப்செட்டில் ராகுல் காந்தி - ஏன்?
பாஜகவுடன் முதல்வர் மறைமுக கூட்டணி.. ராகுல் காந்தி பேச்சுக்கு மதுரை எம்பி கடும் விமர்சனம்
பாஜகவுடன் முதல்வர் மறைமுக கூட்டணி.. ராகுல் காந்தி பேச்சுக்கு மதுரை எம்பி கடும் விமர்சனம்
விஜய் நேர்காணல்: தவெக வேட்பாளர்கள் எதிர்பார்ப்பு! விஜய் எங்கு போட்டியிடுகிறார்? பரபரப்பு தகவல்!
விஜய் நேர்காணல்: தவெக வேட்பாளர்கள் எதிர்பார்ப்பு! விஜய் எங்கு போட்டியிடுகிறார்? பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்" ஆனால், இந்தியா... எச்சரிக்கும் ஈரான் தலைவர்
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ T20 WC Final: டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
டி20 உலகக் கோப்பை; சாதிப்பார்களா சூர்யா பாய்ஸ்.?! இரு பெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு...
UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
UPSC: யுபிஎஸ்சி முடிவில் குழப்பம்: ஒரே பெயர், ஒரே ரேங்க்... 301ம் இடம் யாருக்கு? உரிமை கொண்டாடும் இருவர்!
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
வாவ்.. சிஏ தேர்வில் மதுரை மாணவி டாப்: தரவரிசையில் மாணவிகள் ஆதிக்கம்- எவ்வளவு தேர்ச்சி வீதம்?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
ICAI CA 2026: ஆடிட்டர் ஆகலாம்.. வெளியான சிஏ தேர்வு முடிவுகள்: இன்ட்டர், பவுண்டேஷன் முடிவுகளை உடனே அறிவது எப்படி?
தஞ்சாவூரில் நடந்த மகளிர் தினவிழாவில் பெண்கள் உண்மையான சமூக விடுதலை பெற உறுதிமொழியேற்பு
தஞ்சாவூரில் நடந்த மகளிர் தினவிழாவில் பெண்கள் உண்மையான சமூக விடுதலை பெற உறுதிமொழியேற்பு
BYD Blade Battery: என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
என்னாது.! 5 நிமிஷத்துல காருக்கு சார்ஜா.?! சாதித்த BYD; மாஸ் காட்டும் 2-ம் தலைமுறை பிளேடு பேட்டரி
Embed widget