ABP  WhatsApp

L Murugan on TASMAC : ’தாய்க்குலங்கள் எதிர்த்தும் டாஸ்மாக்கைத் திறக்கவேண்டுமா?’ - எல்.முருகன்

ஐஷ்வர்யா சுதா Updated at: 11 Jun 2021 05:33 PM (IST)

வேலை இல்லாத இந்த காலத்தில் மது கடைகள் திறப்பதின் மூலம் ஏழைகள் கடன் வாங்கி குடிக்க நேரிடும். இது குடும்ப தலைவிகளுக்கு பாரமாக கூடும்.கொரோனா நேரத்தில் மிக அத்தியாவசியமில்லாத இந்த கடைகள் திறக்க வேண்டிய அவசியம் என்ன? என பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கேள்வியெழுப்பினார்

எல்.முருகன்

NEXT PREV

கொரோனா காலத்தில் மதுக்கடைகள் அவசியமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எம்.முருகன். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”
என்றார்  திருவள்ளுவர்.


கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்றின் போது மதுகடைகளை மூட வேண்டும் என்று திமுக போராடிவிட்டு இப்போது மதுக்கடைகளை திறக்க முயல்வது என்ன நியாயம்? கடந்த ஆண்டு மே - 7 2020ம் தேதி அன்றைய எதிர்க்கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின், மற்றும் திரு. உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினர் பதாகை ஏந்தி போராடியது ஞாபகத்தில் இல்லையா.


முதல்வரின் சகோதரி திருமதி. கனிமொழி திமுக பாரளுமன்ற உறுப்பினர் அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது ஆலைகளையே மூடுவோம் என்று  தெரிவித்துள்ளார். “மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு” என்று டாஸ்மாக் கடைகளின் பெயர் பலகைகளிலும், மது பாட்டில்களிலும் எழுதி வைத்து விட்டு மதுவை விற்பனை செய்வதை விட பெரிய முரண்பாடு  இருக்க முடியாது. மதுக்கடைகளை மூடினால் அரசின் வருமானம் பாதிக்கப்படும் என்பதையே திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டு இருக்க முடியாது. மதுக்கடைகள் மூடப்பட்டால், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஏராளமான வழிகள் உள்ளன. 
 தமிழக அரசோ கொரோனா" நோய் தொற்றின் அபாயம் அதிகம் உள்ள காரனாத்தால் மதுக்கடைகளை கடைகளை மூடி உள்ளது. தற்பொழுது கொரோனா நோய் தொற்றின் அபாயம் குறைந்து வருகிறது என்பதால் பல மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க தயாராகி வருவது தமிழகத்திற்கு பேராபத்தில் முடியும்.                       
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிப் பழக்கம் துறந்து தங்கள் குடும்பத்துடன் அமைதியாக வாழும் தமிழக மக்களை மதுக்கடைகளை திறந்து மீண்டும் குடிப்பழக்கத்தில் ஆழ்த்த முயலும் இந்த அபத்தமான முடிவை எதிர்ப்போம். சமுக அக்கறை உள்ள யாரும் இதனை வரவேற்க மாட்டார்கள். தமிழக மக்களை குடியிலிருந்து மீட்க மதுக் கடைகள் மூடினால் வேறு மாதிரியான சமுகப் பிரச்சனைகள் எல்லாம் வரும் என பயமுறுத்திய சமுக வல்லுநர்கள் கூற்றை இந்த கொரோனா தவிடு பொடியாக்கி உள்ளது. இறைவன் தந்த தீமையில் கிடைத்த நன்மை தான் இந்த மதுக்கடைகளை மூடல். அரசு கொரோனாவை ஒழிக்க மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளும் இந்த மதுக்கடைகளை திறக்கும் ஒரு நடவடிக்கையால் வீணாக போய்விடும். 
                                 
“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்”     


மது அருந்துவது விஷத்தை போல் என்கிறார் திருவள்ளுவர்.- பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்
 
  
வேலை இல்லாத இந்த காலத்தில் மது கடைகள் திறப்பதின் மூலம் ஏழைகள் கடன் வாங்கி குடிக்க நேரிடும். இது குடும்ப தலைவிகளுக்கு பாரமாக கூடும்.கொரோனா நேரத்தில் மிக அத்தியாவசியமில்லாத இந்த கடைகள் திறக்க வேண்டிய அவசியம் என்ன?


”மதுக்கடைகள் திறப்பதற்கு அனைத்து தாய்குலங்களும் எதிர்ப்பு என்ற நிதர்சனமான உண்மையை தமிழக முதல்வர் உணரவேண்டும். இன்னும்கூட காலமிருக்கிறது, தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பது என்ற முடிவை மறுபரிசீலனை செய்து நிரந்தரமாக மூட முன்வரட்டும். அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 


Also Read:கோயில் நில ஆக்கிரமிப்புகள் பாரபட்சம் இல்லாமல் அகற்றப்படும் - அமைச்சர் சேகர்பாபு

Published at: 11 Jun 2021 05:33 PM (IST) Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.