TN Assembly Session Today LIVE: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் வேதனை..!

TN Assembly Session Today LIVE Updates: சட்டப்பேரவையில் மூன்றாம் நாளான இன்று நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ABP நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.

ABP NADU Last Updated: 19 Oct 2022 01:12 PM
இப்போது நினைதாலும் உடல் நடுங்குகிறது ; முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தினை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் வேதனை.

பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கை வேண்டும் ; ஜவாஹிருல்லா

தூத்துகுடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மக்களின் உயிரைக் காக்க தவறிய காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அன்றைய முதல்வர்  பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை தேவை என சட்டபேரவையில் ஜவாஹிருல்லா பேச்சு.  

4,067 கிலோ மீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும்; முதல்வர் ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் பலுதடைந்துள்ள 4,067 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலைகள் 2,200 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டபேரவையில் விதி 100ன் கீழ் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார். 

800 கோடியில் 6,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும் ; முதல்வர் ஸ்டாலின்

சட்டபேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, 800 கோடி ரூபாய் செலவில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 6,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என கூறியுள்ளார். 

பரந்தூர் விமான நிலையம் கவன ஈர்ப்பு தீர்மானம்; ஒன்றிய அரசு சொன்னதைச் செய்யாது..! மாநில அரசு சொன்னதைச் செய்யும்..!

எந்த ஒன்றிய அரசும் நிலங்களை கையகப்படுத்தும் போது பாதிக்கப்பட்டச் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதே இல்லை.  மாநில அரசு சொன்னால் செய்யும் எனவே மாநில அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தினை வேறு இடத்திற்கு மாற்றம் செய்திட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கூறியுள்ளார். 

பரந்தூர் விமான நிலையம் : சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்

பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரம்..!

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேட்கும்  கேள்விகளுக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். 

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது..!

சட்டப்பேரவையின் மூன்றாவது மற்றும் இறுதி நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். 

அதிமுக உண்ணாவிரத போராட்டம் : வள்ளுவர் கோட்டத்தில் உறுப்பினர்கள் கைது

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சட்டசபையில் பேச அனுமதிக்கவில்லை என அதிமுக இன்று உண்ணாவிரதம்

சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை  பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி  அதிமுக இன்று உண்ணாவிரதம் செய்கிறது. 

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்கிறார் முதல்வர்!

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்

Background

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்ட தொடரின் 3வது நாளின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நேற்றைய சட்டப் பேரவை கூட்டம் கூடுவதற்கு முன், இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை சந்தித்தனர். ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக முடிவு செய்ய வேண்டும் என இபிஎஸ் தரப்பினர், சபாநாயகரை நேரில் சென்று வலியுறுத்தினர்.


இருப்பினும், சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என தெரிவித்து ஓ. பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களை அதே இருக்கையில் உட்கார அனுமதியளித்தார். 


சட்டப்பேரவையில் அமளியில் ஈடுப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் :


எதிர்க்கட்சித் துணைத்தலைவராக உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேற்று சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர். தொடர்ந்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட, பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்களை அவைக் காவலர்கள் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். 


இதையடுத்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நியாயமாக, நடுநிலையோடு செயல்படக்கூடிய செயலை செய்யாமல், சபாநாயகர் அரசியல் ரீதியாக செயல்படுவதாக பார்க்கிறோம். திமுக தலைவர் ஆலோசனைபடியே சபாநாயகர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம். அதிமுகவை எதிர்கொள்ள முடியாத திமுக தலைவர் சட்டமன்ற சபாநாயகர் மூலமாக எங்களை பழிவாங்க நினைக்கிறார்” என்று தெரிவித்தார். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.