TN Assembly Session Today LIVE: பரபரப்பை ஏற்படுத்திய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை..நிகழ்வுகள் இங்கு உடனுக்குடன்...
TN Assembly Session Today LIVE Updates: சட்டப்பேரவையில் இரண்டாம் நாளான இன்று நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ABP நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.
சட்டப்பேரவையில், இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினரிடம் எந்த விதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் இருந்தது - அருணா ஜெகதீசன் அறிக்கை
போராட்டக்காரர்கள் விலங்குகள் அல்ல ஆனால் அவர்களிடம் காட்டில் வேட்டையாடுவது போல் சுடலை கண்ணு சூட்டிருக்கின்றார்.
சுடலைக்கண்ணு சத்தியமங்கலம் பயிற்சியில் கலந்து கொண்டிருந்த காரணத்தால் இவ்வாறு சுட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம்
ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சிவகுமார் அகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்கிறது. அவர்கள் மீது விசாரணைக்கு பரிந்துரைக்கிறது..
பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆணைய அறிக்கையில் பரபரப்பு தகவல்
2012 ஆம் ஆண்டு மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா - சசிகலா இடையே சுமூக உறவு இல்லை என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது
"திமுக தலைவர் ஆலோசனைபடியே சபாநாயகர் செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம்..!"
பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
சட்டமன்றத்தை பொறுத்தவரை எதிர்க்கட்சித் தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது. எதிர்கட்சி துணை தலைவர் பதவி என்பது அந்தந்த கட்சி கொடுப்பது. அதற்கு சட்டமன்றத்தில் அங்கீகாரம் கிடையாது - சபாநாயகர் அப்பாவு
சட்டப்பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்.எல்.ஏக்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவு இருக்கையை விட்டு வெளியே வந்ததற்கு கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரிக்கை
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளி எதிர்க்கட்சி துணைத் தலைவர் தொடர்பாக பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறி முழக்கம் இப்படி செய்வதை அனுமதிக்கவே முடியாது என சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்.எல்.ஏக்கள் கலகம் செய்யும் நோக்கத்தோடு வந்துள்ளீர்கள், இதை நான் அனுமதிக்க மாட்டேன் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
”எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்.எல்.ஏக்கள் கலகம் பண்ண வந்த மாதிரி தெரியுது. ஏதோ நோக்கத்தோட நீங்க வந்துருக்கீங்க. இத நான் அனுமதிக்க மாட்டேன்” - சபாநாயகர் அப்பாவு
எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் இபிஎஸ் தரப்பினர் அமளி செய்து வருகின்றனர்
இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு அருகருகே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது
கேள்வி நேரத்துடன் தொடங்கியது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்ட தொடரின் 2வது நாள்
எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தெரிவிப்பேன் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக முடிவு செய்ய வேண்டும் என இபிஎஸ் தரப்பினர், சபாநாயகரை நேரில் சென்று வலியுறுத்திய நிலையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்
எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக, சபாநாயகரை இபிஎஸ் தரப்பு சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்ட பேரவை 2வது நாளான இன்று 10 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், பேரவைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தர ஆரம்பித்துள்ளனர்.
சட்டப்பேரவையில் கூடுதல் வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழ்நாட்டில், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டம் சில தினங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது, இந்நிலையில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிரந்தர சட்டமாக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது
நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளை இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் புறக்கணித்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றனர். ஓபிஎஸ்-க்கு எதிர்க்கட்சி துணை தலைவருக்கான இருக்கை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 2வது நாளான இன்று இபிஎஸ் தரப்பு பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து, சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் தாக்கலாகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை பேரவையில் வைக்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டுக்கான கூடுதல் வரவு- செலவுக்கான அறிக்கையை, தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்ட தொடரின் 2வது நாளான இன்று, காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
Background
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பேரவையில் கேள்வி எழுப்பினால், அதற்கான பதில் அழகாக பேரவையில் தரப்படும் என சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில், இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை அளித்த பேட்டியில், “இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் கூடிய அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் 19 ம் தேதி வரை இரண்டு நாட்கள் பேரவை கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 22-23 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் பதிலுரை வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
நாளை நடைபெறும் பேரவை கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு ,ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு தேவைப்பட்டால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் இந்தி எதிர்ப்பு அறிக்கை குறித்தும் விவாதிக்கபட உள்ளது.
எதிர் கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் 4 கடிதமும் ஓ.பி.எஸ் தரப்பு இரண்டு கடிதமும் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேரவையில் கடிதம் கொடுத்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும் பட்சத்தில் உரிய பதில் பேரவையில் அளிக்கப்படும், இது குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து கடிதம் அளித்துள்ள அதிமுக உறுப்பினர்கள் தனது அறையிலும் வந்து இதற்கான விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.
தங்களது கட்சியின் பொன்விழா காரணமாக இன்றைய பேரவை கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், நாளை பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -