TN Assembly Session Today LIVE: சட்டத்தினை உருவாக்கிய அம்பேத்கரின் பெயரினை ஆளுநர் வாசிக்காதது வேதனை - சபாநாயகர் அப்பாவு..!

TN Assembly Session Today LIVE Updates: சட்டப்பேரவையின் முதல் நாளான இன்று நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ABP நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.

ABP NADU Last Updated: 09 Jan 2023 04:57 PM
எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அம்பலமான ஆர்.எஸ்.எஸ் முகம் - ஆளுநரின் செயல் குறித்து திருமாவளவன் எம்.பி ட்வீட்..!

ஆளுநரின் செயலைக் கண்டித்து ஜனவரி 13ஆம் தேதி விசிக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தினை நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார். 





TNAssembly2023: ஆளுநர் செயல் குறித்து சபாநாயகர் அப்பாவு..!

ஆளுநரிடம் கடந்த 5ஆம் தேதி உரை வழங்கப்பட்டது, 7ஆம் தேதி அவர் ஒப்புதல் அளித்தார். ஆனால் உரையில் திருத்தம் செய்யப்பட்டது குறித்து ஆளுநர் முன்கூட்டியே எதுவும் கூறவில்லை என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். 

TNAssembly2023: ஆளுநரின் செயல் நாகரீகமானது இல்லை - சபாநாயகர் அப்பாவு..!

அரசால் தயாரித்து கொடுக்கப்பட்ட உரையில் மாற்றம் செய்யப்பட்டதை முன் கூட்டியே அறிவிக்காமல், மேடையில் பேசுவது நாகரீமல்ல என ஆளுநரின் செயல் குறித்து சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். 

TNAssembly2023: ஆளுநரின் செயலுக்கு சபாநாயகர் வேதனை..!

அரசியல் அமைப்புச் சட்டத்தினை இயற்றிய அம்பேத்கரின் பெயரினைக்கூட ஆளுநர் வாசிக்கவில்லை என சபாநாயகர் அப்பாவு  தெரிவித்துள்ளார்.

TNAssembly2023: 13ஆம் தேதி வரை சட்டப்பேரவை..!

வரும் ஜனவரி 13ஆம் தேதிவரை சட்டப்பேரவை நடைபெறவுள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 

TNAssembly2023: வெளியேறிய ஆளுநர்..!

முதல்வரின் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து ஆளுநர், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே வெளியேறினார்.

TNAssembly2023: வெளியேறிய ஆளுநர்..!

முதல்வரின் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து ஆளுநர் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே வெளியேறினார்.

TNAssembly2023:  முதல்வர் உரை..!

அரசு தரப்பில் தயாரித்து கொடுக்கப்பட்ட உரையை ஆளுநர் வாசிக்கவில்லை,  அரசு தயாரித்து தந்த தமிழ் மற்றும் ஆங்கில உரை தான் அவைக் குறிப்பில் ஏற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார். 

TNAssembly2023: முதல்வரின் உரையைக் கேட்க வரவில்லை - எடப்பாடி பழனிச்சாமி

நாங்கள் தான் எதிர் கட்சியினர், நாங்கள் வந்தது ஆளுநரின் உரையைக் கேட்கத் தான் வந்தோம், முதலமைச்சரின் உரையை கேட்க வரவில்லை என எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் போதுய் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

TNAssembly2023: ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் இல்லை..!

ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் இல்லை, எனவே மக்களுக்கு பயன் பெறும் திட்டங்கள் இல்லை என்பதால், ஆளுநர் உரை வெத்து உரை என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

TNAssembly2023: திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு..!

ஆளுநரிடம் முறையாக ஒப்புதல் பெறாமல் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

TNAssembly2023: முதல்வர் பேச பேச வெளிநடப்பு செய்த ஆளுநர்..!

ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த பின்னர், முதலைச்சர் ஆளுநர் மீது குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு இருக்கையில், ஆளுநர் வெளியேறினார். 

முதல்வர் உரை; வெளியேறிய ஆளுநர்...!

தமிழ்நாடு அரசு தயாரித்து தந்த உரையை ஆளுநர் வாசிக்கவில்லை என முதல்வர் குற்றம் சாட்டிய நிலையில், ஆளுநர் திடீரென வெளியேறினார். 

TNAssembly2023:  பெரியார், கலைஞர் பெயர்களூம் புறக்கணிப்பு..!

ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் போன்ற தலைவர்களின் பெயர்களையும் ஆளுநர் வாசிக்கவில்லை. 

TNAssembly2023: அமைதிப் பூங்கா எனும் வார்த்தையும் தவிர்ப்பு..!

ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்பதை ஆளுநர் தவிர்த்துள்ளார். 

TNAssembly2023: திராவிட மாடல்..!

இந்தியா டுடே பத்திரிகை ஆய்வில் தமிழ்நாடு முதலிடம் பிடித்தது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு கிடைத்திருக்கும் நற்சான்று ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிட மாடல் என்ற வார்த்தையை படிக்காத நிலையில், சபாநாயகர் அப்பாவு திராவிட மாடல் என்று இருமுறை அழுத்தமாக கூறினார். 





TNAssembly2023: சட்டப்பேரவையில் சர்ச்சையாகும் திராவிட மாடல்..!

ஆளுநர் தனது உரையில் திராவிட மாடல் எனும் சொல்லினை தவிர்த்த நிலையில், சபாநாயகர் அப்பாவு திராவிட மாடல் எனும் சொல்லை இரண்டு முறை அழுத்தமாக கூறினார். 

TNAssembly2023: முடிவுக்கு வந்த ஆளுநர் உரை..!

ஆளுநர் ரவி தனது உரையை முடித்துக்கொண்ட நிலையில், சபாநாயகர் அப்பாவு தமிழில் உரையை வாசித்து வருகிறார். 

TNAssembly2023: பரந்தூரில் புதிய விமான நிலையம்..!

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவதன் மூலம் அந்த பகுதி மக்களின் வாழ்கை மேம்பாடு அடையும், தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.. - சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை





TNAssembly2023: 149 பெரியார் சமத்துவ புரங்கள் மேம்பாடு..!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 149 பெரியார் சமத்துவ புரங்களை மேம்படுத்த ரூ. 190 கோடி ஒதுக்கீடு - ஆளுநர் உரை. 

TNAssembly2023: ’முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டி..!

’முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படும் கபடி, கால்பந்து, சிலம்பம் போட்டிகளும் உண்டு - ஆளுநர் ஆர்.என்.ரவி





TNAssembly2023: 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி வளர்ச்சி திட்டம்’

'பேராசிரியர் அன்பழகன் பள்ளி வளர்ச்சி திட்டம்’ மூலம் அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்பட்டு மேம்படுத்தப்படவுள்ளது - பேரவையில் ஆளுநர் ஆர்.என்.உரை. 





TNAssembly2023: ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு..!

இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், எண்ணும் எழுத்தும் குறித்த அரசின் திட்டங்களுக்கு தனது உரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டியுள்ளார். 





TNAssembly2023: சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை

நீட் தேர்வு, ஏழை மற்றும் கிராம புற மாணவர்களுக்கு பின்னடைவாக இருக்கும் என்று இந்த அரசு கருதுகிறது.





TNAssembly2023: 'தமிழ்நாடு எங்கள் நாடு’

TN Assembly : 'தமிழ்நாடு எங்கள் நாடு’ என்று முழக்கமிட்ட திமுக கூட்டணி கட்சிகள்.. எதிர்ப்புக்கு மத்தியில் ஆளுநர் தமிழில் உரை...!





TNAssembly2023: காகிதமில்லாத முதல் உரை..!

தமிழ்நாடு சட்ட பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதம் இல்லாத உரையாக இந்த உரை அமைந்துள்ளது. டிஜிட்டல் திரையினைப் பார்த்து தனது உரையினை ஆளுநர் வாசித்து வருகிறார். 

TNAssembly2023: பாமக கோரிக்கை..!

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

TN Assembly LIVE : போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி

TN Assembly LIVE : போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி

TNAssembly2023: சட்டப்பேரவையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அருகருகே அமர்ந்துள்ளனர்..!

சட்டப்பேரவையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அருகருகே அமர்ந்துள்ளனர்





TN Assembly Live : தமிழ்நாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்கிறார் - ஆளுநர் ஆர்.என் ரவி உரை

TN Assembly Live : தமிழ்நாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்கிறார் -  ஆளுநர் ஆர்.என் ரவி உரை

எங்கள் நாடு தமிழ்நாடு என திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் முழக்கம்

எங்கள் நாடு தமிழ்நாடு என திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் முழக்கம்





எம்.எல்.ஏக்களின் அமளியை கண்டுகொள்ளாத ஆளுநர்..!

திமுக கூட்டணிக்கட்சிகள் வெளிநடப்பு..!

ஆளுநர் உரையைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இடது சாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு. 





தமிழில் உரை..!

தமிழ்நாடு ஆளுநர் சட்டப்பேரவையில் தனது உரையை தமிழில் தொடங்கி, தற்போது ஆங்கிலத்தில் படித்து வருகிறார். 

ஆளுநரை வெளியேற சொல்லி முழக்கம்..!

ஆளுநரை வெளியேற சொல்லி காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, த.வா.க உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் முழக்கம்





ஆளுநருக்கு எதிராக முழக்கம்..!

ஆளுநர் ரவி உரையாற்ற தொடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூச்சல் மற்றும் அமளியில் ஈடுபட்டு ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர். 

தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார் ஆளுநர் ரவி

ஆளுநருக்கு மரியாதை..!

சட்டப்பேரவையில் தமிழ்தாய் வாழ்த்து..!

இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. 

ஓபிஎஸ் வருகை..!

சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் ஓ. பன்னீர் செல்வம் வருகை. 

இபிஎஸ் - ஓபிஎஸ்..!

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை மாற்றப்படாததால், ஓபிஎஸ் அருகே எடப்பாடி பழனிசாமி இன்று அமர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது

சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரலையில் காண..,
புறக்கணிக்கப்படும் ஆளுநர் உரை..?

தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என ஆளுநர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திமுக நீங்கலாக திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

எடப்பாடி பழனிச்சாமி..!

சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்குபெற சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவைக்கு வந்துள்ளார். 

திருமகன் ஈவெரா படத்திறப்பு..!

அண்மையில் மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவெரா திருமகனின் படம் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

தமிழ்நாடு - தமிழகம்

தமிழ்நாடு என்று அழைபதற்கு பதில் தமிழகம் என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என கடந்த வாரத்தில் ஆளுநர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் கூடுகிறது. 

ஆளுநர் உரையை புறக்கணிக்க முடிவு..!

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை இன்று ஆளுநர் உரையுடன் கூடவுள்ள நிலையில், காங்கிரஸ் மற்று கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். 

Background

அனைவருக்கும் வணக்கம் என கூறி சட்டப்பேரவையில் தமிழில் தனது உரையை தொடங்கினார் ஆளுநர் ரவி. அதில், “ மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே என உரையை வாசித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. என் இனிய தமிழ் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம். சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்.” என பேசினார். 


சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழில் பேசிக்கொண்டு இருந்தபோது, 'தமிழ்நாடு எங்கள் நாடு' என அவருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் முழக்கமிட்டனர். காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக தற்போது முழக்கமிட்டு ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 


சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதம் இல்லாத உரையாக கணிணியை பார்த்து ஆளுநர் உரையாற்றினார். அதில் 



  • அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவதற்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்தார். 

  • கடந்த 50 கால ஆண்டு காலத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டை முதலமைச்சர் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்கிறார். 

  • பல்வேறு துறைகளில் நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. விற்பனை விலை பாதிக்காமல் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

  • போதைப் பொருட்கள் கடத்துவதை தடுக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 

  • தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் வடகிழக்கு பருவமழை மற்றும் புயலால் பெரிய அளவில் சேதம் இல்லை.

  • தமிழ்நாடு மீனவர்களை கைது செய்வதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும். மீனவர்களுக்கு முன்னுரிமை அளித்து அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 

  • பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுப்பதற்காக சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 

  • அழிந்து வரும் உயிரினமான நீலகிரி வரையாடு இனத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

  • மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினையில் மாநிலத்தின் நலனை தமிழ்நாடு அரசு பாதுகாத்து வருகிறது. 


  • முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தமிழ்நாடு அரசு தேக்கி வைக்கிறது - நீர்மட்டத்தை தொடர்ந்து உயர்த்தவும்,ரூ.1,500 கோடியில் தமிழ்நாட்டின் நீர்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 



  • நீட் தேர்வு, ஏழை மற்றும் கிராம புற மாணவர்களுக்கு பின்னடைவாக இருக்கும் என்று இந்த அரசு கருதுகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது - நீட் விலக்கு பெறும் மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. 

  • அனைத்து ஆரம்ப பள்ளி குழந்தைகளும் சரளமாக வாசிக்கவும், கணித திறமை பெறவும் நடவடிக்கை - 2025 ஆம் ஆண்டிற்குள் அனைத்து குழந்தைகளுக்கும் அறிவியல், கணித அறிவை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. 


  • பேராசிரியர் அன்பழகன் பெயரில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. 




  • 2 புதிய பறவைகள் சரணாலயம் மற்றும் அகஸ்தியர் மலையில் யானைகள் சரணாலயம் தமிழ்நாடு அரசு அமைந்துள்ளது. 




  • ஒரு கோடி பயனாளர்களை சென்றடைந்துள்ள மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு பாராட்டு 



  • தரமான உயர்கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்க்க அரசு உறுதி - உயர்கல்வி படிக்கும் மகளிருக்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. 

  • நாட்டிலேயே முதல்முறையாக சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு சிறப்பாக நடத்தியது 

  • விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் - முதல்வர் அறிவிப்பின்படி கபடி, கால்பந்து, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது.. 


  • நீதிக்கட்சி ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட சத்துணவு திட்டம் பல பரிணாமங்களுடன் செயல்படுத்தப்படு வருகிறது - பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சருக்கு ஆளுநர் பாராட்டு 



  • சர்வதேச அளவில் திறன் கொண்டவர்களாக இளைஞர்களை மாற்றுவத்ற்கு நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது - இத்திட்டத்தில் இதுவரை 3 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். 

  • திமுக அரசு பதவியேற்ற பின் அனைத்து கிராம வளர்ச்சிக்காக அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது - 2500 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • 149 சமத்துவபுரங்களை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது - 20,900 கி.மீ. நீள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. 


  • தற்போதுள்ள சென்னை பெருநகர் 5 மடங்கு விரிவாக்கம் செய்யப்படும் - 5,904 சதுர கி.மீ. பரப்பளவில் சென்னை பெருநகரம் விரிவாக்கம் செய்யப்பட்ட உள்ளது.



  • பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது - சென்னை பெருநகரின் அருகிலேயே மாமல்லபுரத்தில் துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 


இதனைத் தொடர்ந்து வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! என்ற பாரதியாரின் பாடலோடும், வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் என்று சொல்லி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முடித்தார். 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.