TN Assembly Session Today LIVE: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை குறித்து ஈ.பி.எஸ் கேள்விகேட்டால்.. சபாநாயகர் விளக்கம்..
TN Assembly Session Today LIVE Updates: தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கத்தில் தொடங்குகியது
புதன்கிழமை வரை பேரவை 2 நாட்களுக்கு நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அறிக்கை, ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை பேரவையில் நாளை தாக்கல்
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பேரவையில் கேள்வி எழுப்பினால், அதற்கான பதில் அழகாக பேரவையில் தரப்படும் : சபாநாயகர்
அதிமுக சட்ட விதியை மாற்றுவது அபாயகரமானது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எண்ணத்திற்கு மாறானது ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை, இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப் பேரவையை நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைப்பதாக பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார்.
பேரவை ஒத்திவைப்பு - நாளை காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் அறிவிப்பு
பேரவை நிகழ்ச்சியில் ஓபிஎஸ் பங்கேற்றுள்ளார். எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான அதே இருக்கையில் அமர்ந்துள்ளார்
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான மழைக் கால கூட்ட தொடர் தொடங்கியது
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்ட தொடரின் முதல் நாளான இன்று, அவைக்கு வராமல் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புறக்கணிப்பு செய்துள்ளனர்.
எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி தொடர்பாக, பேரவைத் தலைவர் முடிவு எடுக்காததால் புறக்கணிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவைக்கு வர தொடங்கினர்
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்க ஈபிஎஸ் தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், இன்னும் சபாநாயகர் இதுகுறித்து முடிவெடுக்காததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தொடங்கியதும், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறித்தும், இதர முக்கிய தலைவர்கள் குறித்தும் இரங்கல் தீர்மானங்கள் வைக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரைவைக் கூட்டத்தில் பங்கேற்றால் ஓபிஎஸ் அருகிலேயே எடப்பாடி பழனிசாமி அமரவேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால், பேரவையை புறக்கணித்துவிட்டு, அலுவல் ஆய்வு கூட்டத்தில் இந்த பிரச்னையை எழுப்ப இபிஎஸ் தரப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுவதையொட்டி, சென்னையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் நீடிப்பதாகவும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இருக்கை அருகே ஓ.பன்னீர்செல்வத்துக்கான இருக்கை தொடர்ந்து நீடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை விதியின்படி சபாநாயகருக்கு உள்ள உரிமை அடிப்படையில் துணைத்தலைவர் விவகாரத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கைகளில் மாற்றம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Background
TN Assembly Session Today LIVE Updates:
தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 6 ம் தேதி முதல் மே 10 ம் தேது வரை நடந்து முடிந்தது. கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கூட்டம் தேதி குறிப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
6 மாதத்திற்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட்ட வேண்டும் என்ற விதிகளின்படி, அடுத்த மாதம் நவம்பர் 10 ம் தேதிக்குள் சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கத்தில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய நாளில் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.
தொடர்ந்து, பேரவைத்தலைவர் மு. அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, பேரவை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.
ஆன்லைன் தடை சட்டம்:
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு நிரந்தர அந்தஸ்து வழங்க, சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
ஸ்டெர்லைட் மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை:
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட இருக்கின்றனர். இதுகுறித்தும் இன்றும் தொடங்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட இருக்கின்றனர்.
இது தவிர புதிய சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றனர். இந்த புதிய மசோதாக்கள் குறித்தும் இன்று நடைபெறும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, அவை பேரவையில் ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -