TN Assembly Session Today LIVE: முதலமைச்சர் தாக்கல் செய்த ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேற்றம்..!

TN Assembly Session Today LIVE: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெறவுள்ள நிகழ்வுகள் குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏபிபி நாடுவுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 23 Mar 2023 12:18 PM
அதிமுக வெளிநடப்பு..!

ஓபிஎஸ்-ஐ பேச அனுமதித்ததைக் கண்டித்து அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வெளிநடப்பு செய்துள்ளனர். 

சட்ட மசோதா நிறைவேற்றம்..!

முதலமைச்சர் தாக்கல் செய்த ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஓபிஎஸ் ஆதரவுக்கு ஈபிஎஸ் எதிர்ப்பு

ஆன்லைன் தடைச்சட்ட மசோதாவிற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக ஓபிஎஸ் பேசியதற்கு இபிஎஸ் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

அதிமுக ஆதரவு..!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசியுள்ளார். 

காங்கிரஸ் ஆதரவு..!

காங்கிரஸ் இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தற்கொலைக்கு தூண்டுகிறது..!

தனியார் பெரு முதலாளிகள் தமிழ்நாட்டு இளைஞர்களின் பணத்தினை வழிப்பறி செய்து தற்கொலைக்கு தூண்டுகிறது என ஜி.கே. மணி கூறியுள்ளார். 

பாஜக முழு ஒத்துழைப்பு..!

ஆன்லைன் சூதாட்டத்தை மட்டுமல்ல அனைத்து வகையான சூதாட்டத்துக்கும் பாஜக எதிர்ப்பு தெரிவிப்பதுடன், அதை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாஜக முழு ஒத்துழைப்பு வழங்கும் என நாயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.   

ஆளுநர் செய்தது தவறு - துரைமுருகன்..!

ஆளுநர் ஆன்லைன் தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காதது தவறு என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். 

மத்திய அரசால் கைவிடப்பட்ட ஆளுநர் - ஆளூர் ஷானவாஸ்..!

மாநில அரசுகளே ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தினை மாநில அரசுகளே இயற்றிக்கொள்ளலாம் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறி ஆளுநரை கைவிட்டு விட்டனர். 

ஆளுநர் பதவிக்கு அழகல்ல - ஜவாஹிருல்லா..!

அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த அளுநர் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசியுள்ளார். 

பாமர மக்களின் விருப்பம் - ஈஸ்வரன்..!

ஆன்லைன் சூதாட்டத்தினை தடை செய்வது என்பது படிக்காத பாமர மக்கள் கூட ஏற்பார்கள் என கொ.ம.க. தலைவர் ஈஸ்வரன் பேசியுள்ளார். 

ஆன்லைன் அநியாயம் தொடரக்கூடாது..!

இனி ஒருநாள் கூட அநியாயம் தொடரக்கூடாது என ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்த தீர்மானத்தினை கொண்டு வந்த போது, முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

மின்னஞ்சல்கள்...!

10 ஆயிரத்து 735 பேர் மின்னஞ்சல்களில் 27 பேர் மட்டும் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு எதிராக இருந்தது என முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

அரசின் கடமை - முதலமைச்சர்.!

ஆன்லைன் சூதாட்டத்தினை தடை செய்யும் கடமை அரசுக்கு உள்ளது என முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். 

வேதனையுடன் தொடங்குகிறேஎன் - முதலமைச்சர்..!

ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் போது, வேதனையுடன் தொடங்குறேன் என முதலமைச்சர் கூறியுள்ளார். 

கிருஷ்ணகிரி ஆணவ கொலை வழக்கில் அதிமுக கிளைச்செயலாளார் குற்றவாளி - முதலமைச்சர்

கிருஷ்ணகிரி ஆணவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அவதானப்பட்டி அதிமுக கிளைச்செயலாளர் என முதலமைச்சர் பதில் அளித்துள்ளார். 

அதிமுகவினர் அமளி..!

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதலமைச்சர் பதில் அளித்த பின்னர், அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

எதிர்கட்சித் தலைவருக்கு முதலமைச்சர் விளக்கம்..!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆணவகொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர், ஆணவக்கொலை குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேற்கொண்டு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். 

பட்டாசு தொழிற்சாலை விபத்து - அமைச்சர் பதில்,

பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என பதில் அளித்துள்ளார்.  

நிவாரணத்தினை உயர்த்தி வழங்க வேண்டும் - அதிமுக, பாமக கோரிக்கை..!

பட்டாசு தொழிற்சாலை விபத்தில் பலியானாவர்கள் குடும்பத்திற்கு நிவாராணத்தினை உயர்த்தி வழங்கிட வேண்டும் என அதிமுக மற்றும் பாமகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

காஞ்சிபுரம் பட்டாசு வெடி விபத்து - காங்கிரஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்..!

காஞ்சிபுரத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் உயிர் இழந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி ஆணவக்கொலை - ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதை அடுத்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு முதலமைச்சர் நாளை பதில் அளிப்பார் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். 

இரங்கல்..!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுகள் திரைப்பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.  

பட்ஜெட் மீதான விவாதம்..!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று அதன் மீதான விவாதங்கள் நடைபெறவுள்ளன. 

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..!

தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று மீண்டும்  ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான தடை மசோதாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்யவுள்ளார். 

Background

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. ஈந்த விவாதத்தின் போது பல துறை ரீதியாக பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும். 
தமிழக சட்டசபையின் பொது பட்ஜெட் கடந்த 20ஆம் தேதி நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் தாக்கலில் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000, சோழர் அருங்காட்சியகம் என பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதனை தொடர்ந்து 21ஆம் தேதி வேளாண் துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யபப்ட்டது. அதில் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு அம்சங்கள் அறிவிக்கப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பட்ஜெட்டின் போது கரும்பு டன்னுக்கு கூடுதலாக ரூ 195 வழங்கப்படும், சிறந்த அங்கக விவசாயிகு நம்மாழ்வார் விருது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார். மக்களிடையே இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கதாகவே இருக்கிறது. 
நேற்று தெலுங்கு வருட பிறப்பு என்பதால் சட்டசபை நடைபெறவில்லை. இன்று மீண்டும் தொடங்குகிறது. இன்று காலை சட்டசபையில் முதன்மையாக சபாநாயகர் இரங்கல் தீர்மானம் வாசிப்பார் அதாவது முன்னாள் உறுப்பிணர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்படும். பின் சட்டசபை நிகழ்வுகள் தொடங்கும். 


இன்று சட்டசபை தொடங்கியதும் கேள்வி நேரம் இல்லாமல் நேரமில்லா நேரம் நடத்தப்படும். அதில் மக்களை சார்ந்த முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக, ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் அதற்கான தடை மசோதா நிறைவேற்றப்படும். 
ஆன்லைன் சூதாட்ட மசோதாவை திருப்பி அனுப்பியதும் 9ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது இந்த மசோதா மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட்து. அதன்படி இன்று சட்டசபையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்வார். எதிர்கட்சி தலைவர்களும் இந்த தடை மசோதா குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். 
நேரமில்லா நேரத்தை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும். இதில் ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் பட்ஜெட் மிதான விவாதத்தில் பங்கேற்று விவாதிப்பார்கள். இந்த பட்ஜெட் மீதான விவாதம் நாளையும் தொடரும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் மீண்டும் திங்கள்கிழமை விவாதம் நடைபெறும். 
28ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். பட்ஜெட் மீதான விவாதத்தை தொடர்ந்து மானியகோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். 29-ந்தேதி முதல் மானியக்கோரிக்கையாக நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை காலையில் நடைபெறும், அதனை தொடர்ந்து போக்குவரத்து துறை மாலையிலும் நடைபெறும்.


இன்று முக்கியமாக ஆன்லைன் சூதாட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த முறை ஆன்லைன் சூதாட்ட மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த முறையும் அதே போல் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.