TN Assembly Session Today LIVE: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது சட்டசபை கூட்டம்
TN Assembly Session Today LIVE Updates: சட்டப்பேரவையின் நான்காவது நாளான இன்று நடைபெற்ற நிகழ்வுகளை ஏபிபிநாடு தளத்தில் தெரிந்துகொள்ளலாம்
ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிவாசல்களுக்கான மானியம் இந்தாண்டு ரூ.10 கோடியாக உயர்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு - நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வர்த்தக மையமாக இது அமையும் என உறுதி
ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு - நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வர்த்தக மையமாக இது அமையும் என உறுதி
திமுக ஆட்சி அமைந்த பின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பிரிமீயம் தொகை ரூ.849 ஆக உயர்த்தப்பட்டுள்ளது -
1775 மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படுவதோடு, ரூ.22 லட்சம் வரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அரசு கலைக்கல்லூரி இல்லாத தொகுதிகளில் நிதிநிலைமைக்கு ஏற்ப விரைவில் கல்லூரிகள் தொடங்கப்படும் - திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 31 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் உறுப்பினர் கேள்விக்கு பதில்
புதுக்கோட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் - தற்போதுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் முடிந்தவுடன் புதுக்கோட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சட்டப்பேரவையில் கடைசி நாளான இன்று உறுப்பினர்களின் துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
சேது சமுத்திர திட்டத்தினை நிறைவேற்ற முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளித்ததையடுத்து ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டின் கடல் வாணிபம் பெருகும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
100 கோடி இந்துக்கள் பின் பற்றும் ராமரை கற்பனை கதாப்பாத்திரம் என கூறுவதை ஏற்க முடியாது என பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ கூறியுள்ளார். ராமர் அவதாரப் புருஷன் எனவும் கூறியுள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தினை நிறைவேற்றும் தீர்மானத்தினை ஆதரித்து பேசுகையில் காங்கிரஸ் மற்றும் அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது உடனே முதலமைச்சர் தலையிட்டு முடித்து வைத்தார்.
தென் தமிழ்நாடு அதிகம் பயன்பெறும் என்பதால் இந்த திட்டத்தினை காங்கிரஸ் ஆதரிக்கிறது என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தினை நிறைவேற்றுவதால் நாட்டின் கடல் வழி பாதுக்காப்பு உறுதி படுத்தப்படும் என்பதாலும், தொழில் வளம் பெருகும் என்பதாலும் இந்த திட்டத்தினை பாமக ஆதரிப்பதாக பாமக எம்.எல்.ஏ ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
ராமர் பாலத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் சேது சமுத்திர திட்டத்தினை நிறைவேற்ற பாஜக ஆதரவளிப்பதாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ பேசியுள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தினை பற்றி பேசுங்கள் ஆனால், எங்களின் தெய்வ நம்பிக்கையை குறை கூறாதீர்கள் என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ கூற அதற்கு முதலமைச்சர் அதனை மறுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியினை முட்டுக்கட்டை போட பாஜக நினைக்கிறது. இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என விசிக ஷாநவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால் மாநிலத்தின் நான்கு முனைகளில் இருந்தும் பொருளாதாரம் பெரும் என்பதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிப்பதாக மாரிமுத்து எம்.எல்.ஏ கூறியுள்ளார். மேலும், கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ நாகை மாலி ராமாயணம் ஒரு கற்பனை களஞ்சியம் என காந்தி கூறியதை குறிப்பிட்டு பேசி, இந்த திர்மானத்தினை ஆதரித்து பேசினார்.
இத்திட்டத்தினை நிறைவேற்றினால் தொழில் வளர்ச்சி பெரும் என்பதால் மதிமுக ஆதரவளிப்பதாக சதன் திருமலைக்குமார் ஆதரவளித்துள்ளார்.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தூத்துக்குடி துறைமுகம் முக்கியமான துறைமுகமாக மாறுவதோடு, கடல்சார் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுவதோடு மீனவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதால் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானத்தினை ஆதரித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேசியுள்ளார்.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தூத்துக்குடி துறைமுகம் முக்கியமான துறைமுகமாக மாறுவதோடு, கடல்சார் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுவதோடு மீனவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதால் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானத்தினை ஆதரித்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேசியுள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தினை நடைமுறைப் படுத்தினால் ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மிச்சப்படுத்தப்படும் என ஈஸ்வரன் எம்.எல்.ஏ பேசியுள்ளார். மேலும், இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இருக்காது எனவும் அவர் இந்த தீர்மானத்தினை ஆதரித்து பேசியுள்ளார்.
ராமர் பாலம் என்பது இல்லை என ஒன்றிய அமைச்சர் பேசியதை சுட்டிக்காட்டி வேல் முருகன் எம்.எல்.ஏ பேசி வருகிறார்.
சேது சமுத்திர திட்டம் நடைமுறைப்படுத்தினால் இந்திய நாட்டின் பொருளாதாரத்தினை வளர்க்கவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தினை வளர்க்கவும் சேது சமுத்திர திட்டம் உதவும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தினை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டம் சேது சமுத்திர திட்டம் - முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.
ஆகம விதிகளுக்குட்பட்டு பழனியில் நடைபெறும் குடமுழுக்கு தமிழில் நடைபெறும் என அறநிலையத்துறை அமைச்சஎ சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
திருவிடைமருதூர் தொகுதியில் உள்ள நாச்சியார் ஊரில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு இன்னும் மூன்று மூன்று மாதத்தில் குடமுழுக்கு விழா நடைபெறும் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமங்களுக்கு ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துடன் கூடுதலாக நகர பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
துறையூர் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மட்டும் இதுவரை 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் ஓமலூர் சாலையில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.
நியாய விலைக்கடையில் மானிய விலையில் எல்.இ.டி மின் விளக்குகள் வழங்க ஏற்பாடு செய்யப்படுமா என அதிமுக எம்.எல்.ஏ முனுசாமி கேள்வி எழுப்பியதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட கைரேகை மறைந்தவர்களுக்கு பயோ மெட்ரிக் பதிலாக கண் கருவிழிகள் ஸ்கேன் செய்து பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்கள் பாக்கெட்டுகளில் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு இறுதிக்குள் திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று வேளாண் பொருட்களை சந்தைப் படுத்துதல் உள்ளிட்ட மூன்று சட்ட முன் வடிவுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
Background
தமிழ்நாடு சட்டபேரவையின் நான்காவது நாளான இன்று கடல் நீரை குடிநீராக்கும் திட்டமான சேது சமுத்திர திட்டத்தினை விரைவில் நிறைவேற்றிட இன்று தீர்மானம் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக நேற்று, தமிழ்நாடு ஆளுநரின் உரையின் மீது வருத்தமும், நன்றியும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை எனவும், உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்து படித்த எதுவும் அவை குறிப்பில் இடம் பெறாது எனவும் சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் புறப்பட்டார். இதையடுத்து ஆளுநரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, மரபை மீறி தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டதாகவும், அவையிலிருந்து பாதியிலேயே வெளியேறியது கண்டிக்கத்தக்கது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு, போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும், மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தையும் அறிவித்தனர்.
இதையடுத்து, நேற்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
அதில் சட்டமன்றத்தில் திமுகவின் எம்.எல்.ஏக்கள் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது எனவும், ஆளுநருக்கு எதிராக போஸ்டர்களை அடிக்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஆளுநரின் சட்டப்பேரவை உரைக்கு வருத்தமும், நன்றியும் பதிவு செய்ய கோரி அறிவிப்பு வரப்பெற்றுள்ளதாக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் எழுதியுள்ளார். சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் ஆளுநர் உரையாற்றியதற்கு பேரவை வருத்தத்தை பதிவு செய்கிறது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டு ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, பேரவைக்கு வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும் விடுத்தும் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையாற்றியமைக்கு பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்கிறது.
பேரவையின் மாண்பினை போற்றிடும் வகையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநர் அவர்களின் உரைக்கு பேரவை உறுப்பினர்கள் நன்றி உடையவர்கள் ஆவார்கள்” என தெரிவித்துள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -