சித்த மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதாவில், ஆளுநரின் பரிந்துரையை ஏற்க முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று (அக்.15) தொடங்கி நடைபெற்று வருகிறது, இதில் முதல்வர் ஸ்டாலின் இன்று பேசிய உரை:
''பேரவையில் நிறைவேற்றப்படும் முன், சட்ட முன் வடிவின்மீது கருத்துச் சொல்ல ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை. முன்முடிவை பேரவை ஆய்வு செய்ய ஆளுநர் செய்த பரிந்துரையை ஏற்க முடியாது. சட்டப்பேரவை விதிகளுக்கும் அரசியலமைப்பு சாசனத்திற்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே
சட்டம் இயற்றுவது சட்டப்பேரவையின் அதிகாரத்துக்கு உட்பட்டது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே சட்ட முன் வடிவுக்கு அதிகாரம் உள்ளது.
சித்த மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதாவை ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆளுநரின் கோரிக்கையை நிராகரிக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். ஆளுநருக்கு எதிராக முதல்வர் முன்மொழிந்த தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.