TN Assembly Session LIVE: தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

TN Assembly Session 2022 LIVE Updates: தமிழ்நாடு பட்ஜெட் மீதான நான்காம் நாள் பேரவை கூட்டம் நிகழ்வுகள் உடனுக்குடன் விரைவாக கீழே லைவ் ப்ளாக்கில் காணலாம்.

ABP NADU Last Updated: 24 Mar 2022 12:44 PM
தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். கடந்த வெள்ளிக்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் மொத்தம் 6 நாட்கள் அலுவல்கள் நடைபெற்றன.

அபயம் தேடி வரும் இலங்கை தமிழர்கள் - பேரவையில் முதலமைச்சர் விளக்கம்

அபயம் தேடி வரும் இலங்கை தமிழர்களை பாதுகாப்பாக தங்க நடவடிக்கை என்றும், மத்திய அரசுடன் பேசி அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

ஓபிஎஸ் பேசும்போது பிடிஆர் வெளியே சென்றது ஏன்..? - சபாநாயகர் விளக்கம்

அலுவல் நிமித்தமாகவே அமைச்சர் பிடிஆர் வெளியேறியதாக, நேற்று சட்டப்பேரவையில் ஓபிஎஸ் பேசிக்கொண்டிருந்தபோது வெளியேறியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்த நிலையில், சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.

பாலிடெக்னிக், ஐடிஐ பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

10ஆம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக், ஐடிஐ பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் - அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

ஆளுநரின் பரிசீலனையில் 19 மசோதாக்கள் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

19 சட்ட மசோதாக்கள் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாகவும், பொருளாதார ஆலோசனைக்கான குழுவினர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் பணியாற்றுகின்றனர் எனவும் அமைச்சர் பிடிஆர் கூறினார்.

பேரவையில் இருந்து வெளிநடப்பு ஏன்..? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்ச ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, நிதியமைச்சர் அவையை விட்டு வெளியேறியதாக குற்றச்சாட்டு சுமத்திய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் 97% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

மதுரை மெட்ரோ ரயில் திட்டம்; சாத்தியக்கூறு பற்றி ஆய்வு - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக்கூறு பற்றி ஆய்வு செய்து மே மாதத்திற்குள்  தெரிவிக்கப்படும் என்று பொதுபட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பதிலுரையின்போது கூறினார். மேலும், கோவை மெட்ரோல் ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகிவிட்டது என்றும் கூறினார்.

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து பேச அனுமதிக்கவில்லை என்று சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

திமுக ஆட்சியில் சாலை விபத்துகள் குறைந்துள்ளது - அமைச்சர் எ.வ.வேலு

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சாலை விபத்துகள் 15% ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு காரணமாகவே தமிழ்நாட்டில் விபத்து குறைந்துள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். 

நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ. 1000 கோடி விடுவிப்பு

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் 5 சவரனுக்கு உட்பட நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ. 1000 கோடி விடுவிக்கப்படுவதாகவும், வரும் 31-ம் தேதிக்கு பதிலாக 280ம் தேதிக்குள்ளேயே அனைவருக்கும் தள்ளுபடி ரசீது தரப்படும் என அமைச்சர் பெரியசாமி விளக்கம்

நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ. 1000 கோடி விடுவிப்பு

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் 5 சவரனுக்கு உட்பட நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ. 1000 கோடி விடுவிக்கப்படுவதாக அமைச்சர் பெரியசாமி விளக்கம்

தமிழ்நாடு பட்ஜெட் மீதான நான்காம் நாள் பேரவை கூட்டம் நிகழ்வுகள் ஆரம்பம்

தமிழ்நாடு பட்ஜெட் மீதான நான்காம் நாள் பேரவை கூட்டம் நிகழ்வுகள் ஆரம்பம்

விருதுநகர் வன்கொடுமை வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் - முதலமைச்சர்

விருதுநகரில் 22 வயது பெண் பாலியல் வண்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு எந்த ரூபத்திலும் அனுமதி கிடையாது: அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு எந்த ரூபத்திலும் அனுமதி கிடையாது: அமைச்சர் பொன்முடி

அம்மா மினி கிளினிக் திட்டம் மூடப்பட்டுள்ளது - சட்டசபையில் ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு

கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் மூடப்பட்டுள்ளதாக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் குற்றம் சாட்டியுள்ளார். 

Background

TN Assembly Session 2022 LIVE Updates: தமிழ்நாடு பட்ஜெட் மீதான நான்காம் நாள் பேரவை கூட்டம் நிகழ்வுகள் உடனுக்குடன் விரைவாக கீழே லைவ் ப்ளாக்கில் காணலாம்.


தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு எந்த ரூபத்திலும் அனுமதி கிடையாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் எந்த நுழைவுத் தேர்வையும் முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார் என்று பேரவையில் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.