TN Assembly Session LIVE: தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு எந்த ரூபத்திலும் அனுமதி கிடையாது: அமைச்சர் பொன்முடி

TN Assembly Session 2022 LIVE Updates: தமிழ்நாடு பட்ஜெட் பேரவை கூட்டம் பற்றிய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் விரைவாக கீழே லைவ் ப்ளாக்கில் காணலாம்.

ABP NADU Last Updated: 23 Mar 2022 01:49 PM
Meera Mithun: நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் - சென்னை முதன்மை நீதிமன்றம்

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த நடிகை மீரா மிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில், நடிகை மீரா மிதுனை கைது செய்து ஏப்ரல் 4 ம் தேதி ஆஜர்படுத்துமாறு அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மதிமுகவினர் யாரையும் புண்படுத்தியதில்லை, இழக்கவும் விரும்பவில்லை - வைகோ

மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சில மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்காத நிலையில் வைகோ விளக்கம் அளித்துள்ளார். “மதிமுகவினர் யாரையும் நான் இழக்கவில்லை. என்னோடு எவ்வளவு காலம் பயணித்த சில நிர்வாகிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்திவர்களும் கட்சிக்கு துரோகம் நினைப்பவர்கள் இந்த பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்கவில்லை. திமுக மதிமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. திமுக கூட்டணியில் முழு புரிதலோடு பணியாற்றி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

அம்மா மினி கிளினிக் திட்டம் மூடப்பட்டுள்ளது - சட்டசபையில் ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு

கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் மூடப்பட்டுள்ளதாக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு எந்த ரூபத்திலும் அனுமதி கிடையாது: அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு எந்த ரூபத்திலும் அனுமதி கிடையாது: அமைச்சர் பொன்முடி

விருதுநகர் வன்கொடுமை வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் - முதலமைச்சர்

விருதுநகரில் 22 வயது பெண் பாலியல் வண்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என தெரிவித்திருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் 269 வாக்குறுதிகளுக்கு மட்டுமே அரசாணை வெளியிடப்பட்டது - முதலமைச்சர்

அதிமுக ஆட்சியில் 269 வாக்குறுதிகளுக்கு மட்டுமே அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தி இருக்கிறார்கள் என முதலமைச்சர் சுட்டிக்காட்டி இருக்கிறார்

பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டனர் - முதலமைச்சர்

பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டனர் - முதலமைச்சர்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதில்

10 மாத குழந்தையிடம் 10ஆம் வகுப்பு மதிப்பெண் கேட்பதுபோல் உள்ளது; ஆனால் இந்த அரசு பட்டப்படிப்பிலும் பதக்கம் வெல்லும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன - முதலமைச்சர்

இன்னுயிர் காப்போம், நான் முதல்வன் என்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில்

10 மாத குழந்தையிடம் 10ஆம் வகுப்பு மதிப்பெண் கேட்பதுபோல் உள்ளது; ஆனால் இந்த அரசு பட்டப்படிப்பிலும் பதக்கம் வெல்லும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் உரை;


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டது- முதலமைச்சர்

அனைவருக்கும் நல்வாழ்வு என்ற நோக்கில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டது என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார் 

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து முதலமைச்சர்

கொரோனா காலத்தில் வீட்டிற்கே சென்று இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது என முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்

போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் திருமப்பெறப்பட்டுள்ளன - முதலமைச்சர்

கூடங்குளம், சேலம் 8 வழிச்சாலை திட்டங்களுக்கு எதிராக போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் திருமப்பெறப்பட்டுள்ளன என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

இதுவரை 208 வாக்குறுதிகள் அரசின் திட்டங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன - முதலமைச்சர்

இதுவரை 208 வாக்குறுதிகள் அரசின் திட்டங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன என தேர்தல் வாக்குறிதிகளை ஆட்சிக்கு வந்தபிறகு  நிறைவேற்றியது குறித்து முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார் 

மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி - முதலமைச்சர்

கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சுமார் 55,000 மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி - முதலமைச்சர் 

விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரை

ஆட்சிக்கு வந்தபின் பால் விலை குறைக்கப்பட்டுள்ளது, கொரோனா நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது - முதலமைச்சர் 

பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

சட்டன்மன்ற உறுப்பினர்கள் வைக்கும் கோரிக்கையான அரசு பள்ளி வகுப்பறைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை இந்த ஐந்து வருட காலத்தில் படிப்படியாக செய்து தரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார் 

ஐந்து மலைக் கோயில்களுக்கு ரோப் கார் - அமைச்சர் சேகர் பாபு

தேர்தல் வாக்குறுதியில் திமுக தெரிவித்தபடி, திருச்சி மலைக்கோயில் உள்ள ஐந்து மலைக் கோயில்களுக்கு ரோப் கார் வசதி விரைவில் செய்து தரப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருக்கிறார்.

உறுப்பினர் அர்ஜூனனை கலாய்த்த அமைச்சர் துரை முருகன்

அனைவரும் வழக்கமாக தலைவர், துணை தலைவரை வாழ்த்தி வரும் நிலையில், கொறடாவை யாரவது வாழ்த்துகிறார்கள் என்றால் விடுங்களேன் என அமைச்சர் துரை முருகன் தெரிவித்திருக்கிறார்

மருத்துவமனைகளின் தரம் குறித்து அமைச்சர் மா.சு பதில்

மக்களின் பயன்பாட்டை பொறுத்து மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் பதில் அளித்திருக்கிறார்

பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாள் அப்டேட் உடனுக்குடன்...

தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதத்தின் மூன்றாவது நாள் ஆரம்பம்.. 

பட்ஜெட் மீதான விவாதம் : மூன்றாவது நாள் நிகழ்வுகள் உடனுக்குடன்..

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்புகள் சீரமைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பு சீரமைப்பு பணிகள் நடைபெற்றுவருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜை பேரவையில் தெரிவித்தார்.

எஞ்சிய விவசாயிகளுக்கு மார்ச் மாதத்திற்குள் இலவச மின்சாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி

ஒரு லட்சம் மின் இணைப்பு திட்டத்தின் கீழ் எஞ்சிய விவசாயிகளுக்கு மார்ச் இறுதிக்குள் இலவச மின்சாரம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் இதுவரை 87,465 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில்பாலாஜி

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியாக கூறுகிறேன் என்றும், 10 மாத ஆட்சியில் திமுக செய்த சாதனைகள் எந்த ஆட்சியிலும் இருந்ததில்லை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - ஈ.பி.எஸ்

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - ஈ.பி.எஸ்

Background

தமிழ்நாடு பட்ஜெட் பேரவை கூட்டம் பற்றிய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் விரைவாக கீழே லைவ் ப்ளாக்கில் காணலாம்.


தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு எந்த ரூபத்திலும் அனுமதி கிடையாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் எந்த நுழைவுத் தேர்வையும் முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார் என்று பேரவையில் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.