TN Assembly Session LIVE: தமிழ்நாடு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

TN Assembly Session 2022 LIVE Updates: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் பற்றிய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் விரைவாக கீழே லைவ் ப்ளாக்கில் காணலாம்.

ABP NADU Last Updated: 07 Jan 2022 12:48 PM
தமிழ்நாடு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 

கட்சி எல்லைகளை மறந்து ஆளுநர் உரையை மனப்பூர்வமாக வரவேற்க வேண்டும் - முதல்வர்

கட்சி எல்லைகளை மறந்து, மக்களின் நிலையை உணர்ந்து ஆளுநர் உரையை அனைவரும் மனப்பூர்வமாக வரவேற்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேச்சு

தி.மு.க.வினர் சிறிய குற்றத்தில் ஈடுபட்டாலும் நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை

தி.மு.க.வினர் சிறிய குற்றத்தில் ஈடுபட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் திட்டவட்டமாக உறுதியுடன் கூறியுள்ளார். 

தி.மு.க.வினர் சிறிய குற்றத்தில் ஈடுபட்டாலும் நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை

தி.மு.க.வினர் சிறிய குற்றத்தில் ஈடுபட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் திட்டவட்டமாக உறுதியுடன் கூறியுள்ளார். 

தி.மு.க.வினர் சிறிய குற்றத்தில் ஈடுபட்டாலும் நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை

தி.மு.க.வினர் சிறிய குற்றத்தில் ஈடுபட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் திட்டவட்டமாக உறுதியுடன் கூறியுள்ளார். 

மழை, வெள்ள பாதிப்பு குறித்து பேச அ.தி.மு.க.விற்கு எந்த உரிமையும் இல்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மழை வெள்ளம் குறித்து பேசுவதற்கு அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் இல்லை, எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.

தமிழக பள்ளிகளை இந்தியாவிற்கே முன்மாதிரியாக மாற்றப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகள் இந்தியாவிற்கே முன்மாதிரியாக செயல்படுவதற்கு இந்த அரசு அனைத்து சக்திகளையும் பயன்படுத்தும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியுள்ளார். 

தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் 5 மாதங்களிலே நிறைவேற்றம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தி.மு.க. 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவதாக அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலான திட்டங்களை 5 மாதங்களிலே நிறைவேற்றியுள்ளது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

தி.மு.க. ஆட்சியில் தடுப்பூசி செலுத்துவது மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது - முதல்வர்

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் தடுப்பூசி செலுத்துவது மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 8.07 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 2.84 சதவீதம் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு பிறகு தமிழ்நாட்டில் 87.27 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 61.25 சதவீதம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

தமிழ்நாட்டில் அம்மா உணவகம் எப்போதும் மூடப்படாது என்பதே எனது நிலைப்பாடு - முதல்வர்

தமிழ்நாட்டில் எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பதுதான் எனது எண்ணம். இன்றுவரையும் இதுதான் என்னுடைய நிலைப்பாடு. இனியும் அந்த நிலைப்பாடு தொடரும் என்று எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை - முதல்வர்

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் 2 ஆயிரத்து 363 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ள 338 வழக்குகளில் 135 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகளின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது - முதல்வர்

தி.மு.க. ஆட்சியில் குழந்தைகளின் பாதுகாப்பிலும், குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுப்பதற்கும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

நீட் விலக்கு நடவடிக்கை : ஆதரவு அளிப்பதாக கூறிய அ.தி.மு.க.விற்கு முதல்வர் நன்றி

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறிய அ.தி.மு.க.வினருக்கு நன்றி என்றும் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வைத்திலிங்கத்திற்கு முதல்வர் நன்றி

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் துரிதமாக செயல்படுவதாக தமிழக அரசை பாராட்டிய அ.தி.மு.க. உறுப்பினர் வைத்திலிங்கத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார்.

கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா பேரவையில் தாக்கல்

கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைத்து, கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவை பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். 

கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. வெளிநடப்பு

தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தில் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. வெளிநடப்பு

தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தில் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு சட்டசபையில் கேள்வி நேரம் நிறைவு

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் கேள்வி நேரம் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, அமைச்சர் பெரியசாமி பேசி வருகிறார். 

மத்திய அரசிடம் கூடுதல் மண்ணெண்ணெய் பெற நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சக்கரபாணி

சட்டசபை கேள்வி நேரத்தின்போது, எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜன் மத்திய அரசிடம் வலியுறுத்தி கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, மத்தி ய அரசிடம் கூடுதல் மண்ணெண்ணெய் பெற முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கூடுதல் மண்ணெண்ணெய் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடங்கியது தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் கேள்வி நேரம்

நடப்பாண்டிற்கான தமிழ்நாடு முதல் சட்டசபை கூட்டத்தொடரின் கடைசிநாள் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. தற்போது கேள்வி நேரத்தில் அந்தந்த துறைகளுக்கான அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். 

Background

சென்னை, கலைவாணர் அரங்கில் நடப்பாண்டிற்கான தமிழ்நாடு முதல் சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசிநாளான இன்று கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.