தமிழ்நாடு சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 6 ம் தேதி முதல் மே 10 ம் தேது வரை நடந்து முடிந்தது. கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கூட்டம் தேதி குறிப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 


6 மாதத்திற்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட்ட வேண்டும் என்ற விதிகளின்படி, அடுத்த மாதம் நவம்பர் 10 ம் தேதிக்குள் சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டது. 


அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூட்ட அரங்கத்தில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய நாளில் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும். 


தொடர்ந்து, பேரவைத்தலைவர் மு. அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, பேரவை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். 


ஆன்லைன் தடை சட்டம்: 


சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு நிரந்தர அந்தஸ்து வழங்க, சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். 


ஸ்டெர்லைட் மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை:


ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட இருக்கின்றனர். இதுகுறித்தும் இன்றும் தொடங்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட இருக்கின்றனர். 


இது தவிர புதிய சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றனர். இந்த புதிய மசோதாக்கள் குறித்தும் இன்று நடைபெறும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, அவை பேரவையில் ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.