Watch Video: ஆவேசமாக பாய்ந்த மனோஜ் பாண்டியன்! சட்டசபையிலும் எதிரொலித்த அதிமுக இரட்டை தலைமை பிரச்சனை: நடந்தது என்ன? பரபரப்பு காட்சிகள்!

EPS Vs OPS Fight in TN Assembly : தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது ஓ.பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Continues below advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது ஓ.பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளியேறினர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் - ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

Continues below advertisement

சட்டப்பேரவையில் ஏற்பட்ட அமளியில் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், கோவிந்தசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மனோஜ் பாண்டியன் ஆவேசமாக இருக்கையிலிருந்து எழுந்து கட்டியவாறு அதிமுக எம்.எல்.ஏ-க்களை நோக்கி சென்றார். உடனே ஓ.பன்னீர்செல்லம் அவர் கையை பிடித்து இழுத்து தடுத்தார். இதனால் சட்டசபையில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக உறுப்பினர்கள், தொடர்ந்து கூச்சலிட்டு  வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு இரண்டாவது சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, அதற்கு அ.தி.மு.க. சார்பில் தளவாய் சுந்தரம், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு அதிமுக முழு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “இதை விவாதமின்றி நிறைவேற்றியிருக்கலாம் என்றும் கூறியதுடன், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை வரவேற்பதாக” தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர், கட்சிக்கு ஒருவர் என கூறிவிட்டு ஏன் மற்றொருவரை பேச அனுமதித்தீர்கள் என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, “முக்கியமான மசோதா என்பதால், முன்னாள் முதலமைச்சர் என்ற ரீதியில் பேச வாய்ப்பளித்தோம். வேறு நோக்கம் கற்பிக்க வேண்டாம், அதிமுக எம்.எல்.ஏக்கள் இருக்கையில் அமர வேண்டும்” என்று கூறினார்.  

இதனைத்தொடர்ந்து அனைத்து கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒருமனதாக ஆன்லைன் தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.  சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என கூறிய சபாநாயகர், அதிமுக விவகாரங்களுக்குள் தான் வரவில்லை எனவும் சபாநாயகர் பேசினார். அதிமுக-வினரிடையே நீடிக்கும் இரட்டைத் தலைமை பிரச்சனை சட்டப்பேரவையிலும் தொடர்கிறது. 

வரும்- 28- ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். பட்ஜெட் மீதான விவாதத்தை தொடர்ந்து மானியகோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். 29-ந்தேதி முதல் காலை மானியக்கோரிக்கையாக நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மீதான விவாதம்நடைபெறும், அதனை தொடர்ந்து போக்குவரத்து துறை மீதான விவாதம் மாலையில் நடைபெறும்.

முன்னதாக, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு, ஏற்கனவே ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் மீண்டும் திருப்பி அனுப்பினார். கடந்த சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் இன்று நடைபெறும் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது இரண்டாவது முறையாக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என குறிப்பிட்டிருந்தார். ஆன்லைன் சூதாட்டம் மூலம் தமிழ்நாட்டில் பல உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக இந்த தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. இம்முறை இந்த தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என நம்பப்படுகிறது


 

Continues below advertisement