மேலும் அறிய

வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!

ஜனநாயக உரிமைகளை மதிக்கும் தவெக அரசு, கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக விஜய் அறிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். 

அனைத்து வழக்குகளும் வாபஸ்

சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் சில அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். அப்போது திமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் குறித்து பேசினார். அதாவது, “கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை, தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

ஜனநாயக உரிமைகளை மதிக்கும் நமது அரசு, கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களது நியாயமான கோரிக்கைக்களுக்கும் இவ்வரசு உறுதுணையாக நிற்கும்” என கூறினார். 

நியாயமான கோரிக்கைக்களுக்கு துணை நிற்போம்

மேலும், “திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சில விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது. அதேபோல் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நோக்கத்தோடு, விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று போராடிய விவசாயிகள் மீதும் முந்தைய அரசால் மனித நேயமற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும்  எனவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் அறிவிப்புக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். அப்போது நீட் தேர்வு போராட்டத்தில் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என தளி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ., சி.வி.சண்முகம், அரசியல் பிரமுகர்கள் மீது போடப்பட்ட குற்றவழக்குகளைத் தவிர போராட்டங்களுக்கு போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அமைச்சர் வன்னி அரசு பேசும்போது வழக்குகளை வாபஸ் பெறும்போது மாணவர்களின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!
வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!
Maternity Leave : ஒரு வருடம் தொடர் விடுமுறை.! மகளிர் எதிர்பார்த்த சூப்பரான அறிவிப்பு - வெளியானது அரசாணை
ஒரு வருடம் தொடர் விடுமுறை.! மகளிர் எதிர்பார்த்த சூப்பரான அறிவிப்பு - வெளியானது அரசாணை
என்.எல்.சி பணி நீக்கம்: 1060 தமிழர்களின் வாழ்வாதாரம் காக்க தமிழக அரசு தலையிட அன்புமணி வலியுறுத்தல்
என்.எல்.சி பணி நீக்கம்: 1060 தமிழர்களின் வாழ்வாதாரம் காக்க தமிழக அரசு தலையிட அன்புமணி வலியுறுத்தல்
நன்றி மறந்த என்எல்சி; 347 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: 713 பேரை நீக்கத் திட்டம்- அரசு உடனே தலையிடக் கோரிக்கை!
நன்றி மறந்த என்எல்சி; 347 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: 713 பேரை நீக்கத் திட்டம்- அரசு உடனே தலையிடக் கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!
வழக்குகளால் திண்டாடிய ஆசிரியர்கள், விவசாயிகள்.. ஒரே அறிவிப்பில் அனைத்தையும் தீர்த்த விஜய்!
CM Vijay: புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆவடிக்கு 24 மணி நேரமும் சேவை - புதிய அறிவிப்புகளால் அதிரவிட்ட விஜய்
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
விஜய் தான் அடுத்த PM.! அப்போ ராகுல் காந்தி.? ஜோதிடம் கணித்த கனிமொழி MLA- என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!
Maternity Leave : ஒரு வருடம் தொடர் விடுமுறை.! மகளிர் எதிர்பார்த்த சூப்பரான அறிவிப்பு - வெளியானது அரசாணை
ஒரு வருடம் தொடர் விடுமுறை.! மகளிர் எதிர்பார்த்த சூப்பரான அறிவிப்பு - வெளியானது அரசாணை
நன்றி மறந்த என்எல்சி; 347 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: 713 பேரை நீக்கத் திட்டம்- அரசு உடனே தலையிடக் கோரிக்கை!
நன்றி மறந்த என்எல்சி; 347 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்: 713 பேரை நீக்கத் திட்டம்- அரசு உடனே தலையிடக் கோரிக்கை!
நாடு முழுவதும் சர்க்கரை தட்டுப்பாட்டுக்கு மத்தியில் படாளம்ஆலை மூடல்? 30,000 விவசாயிகள் கவலை
நாடு முழுவதும் சர்க்கரை தட்டுப்பாட்டுக்கு மத்தியில் படாளம்ஆலை மூடல்? 30,000 விவசாயிகள் கவலை
TN Weather News: ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை
ரைட்டு..! 16 மாவட்டங்களில் இன்று கனமழையா? சென்னை எப்படி? தமிழக வானிலை அறிக்கை
Embed widget