Tamil Nadu 12th Result 2025: விழுப்புரம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் என 21,581 பேர் தேர்வு எழுதினர். இதில் 10,533 மாணவர்களில் 9,851 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தில் 95.11% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மார்ச் மாதத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகள் வியாழக்கிழமை இன்று வெளியிடப்பட்டன.
இத்தேர்வை விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகளில் 10,533 மாணவர்கள், 11,048 மாணவிகள் என மொத்தமாக 21,581 பேர் எழுதினர். இதில் 9,851 மானவர்கள், 10,675 மாணவிகள் என மொத்தமாக 20,526 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.11% தேர்ச்சியாகும்.
விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் 18-ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் 93.17% தேர்ச்சியுடன் 27- ஆவது இடத்திலிருந்த விழுப்புரம் மாவட்டம், இந்தாண்டு 9 இடங்கள் முன்னேறியுள்ளது. மாவட்ட அளவில் 87 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகள் 93.71% தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளிலிருந்து 14,752 பேர் எழுதி 13,824 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தமுள்ள 125 அரசுப் பள்ளிகளிலிருந்து 35 பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டு 20-ஆவது இடத்திலிருந்த விழுப்புரம் மாவட்டம், நிகழாண்டு 11-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்வு: 8.21லட்சம் மாணவர்கள்
2024-2025 நிதியாண்டுக்கான 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். மார்ச் 3ஆம் தேதி முதல் 25 வரை தேர்வு நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்டல் .4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில் ஒருநாள் முன்கூட்டியே 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது.
Tamil Nadu 12th Result 2025: அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற அரசுப் பள்ளிகள் - முதல் 5 மாவட்டங்கள்
அரசுப் பள்ளி மாணாக்கர்களில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள் பின்வருமாறு...
அரியலூர் - 98.32%
ஈரோடு - 96.88%
திருப்பூர் - 95.64%
கன்னியாகுமரி - 95.06%
கடலூர் - 94.99%
09:32 AM (IST) • 08