திருவாரூர்: 12ஆம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 27 ஆண்டு சிறைதண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Continues below advertisement

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பெற்றோரை இழந்த நிலையில் பெரியம்மா வீட்டில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி சிறுமி, வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்கி கடைக்கு சென்றுள்ளார். அப்போது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பூசாரி தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 39). இவர், திருமணம் ஆகாத நிலையில், சிறுமியை கடத்தி தனது வீட்டிற்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் 

இதற்குள் கடைக்கு சென்ற சிறுமியை காணமால், அவருடைய குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது சதீஷ்குமார் சிறுமி கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருடை வீட்டிற்கு சென்று உறவினர்கள் சிறுமியை மீட்டனர். இதுகுறித்து மன்னார்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.

Continues below advertisement

இந்த வழக்கு விசாரணை திருவாரூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவில் மகிளா நீதிபதி சரத்ராஜ் தீர்பளித்தார். அந்த தீர்ப்பில், சதீஷ்குமாருக்கு, போக்சோ பிரிவின் கீழ் 20 ஆண்டுகள், சிறுமியை கடத்தி  சென்றதற்காக 7 ஆண்டுகள் என 27 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.8 ஆயிரம் அபாரதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 5 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என தீர்ப்பில்  குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கண்ணன் ஆஜரானார். குற்றவாளிக்கு விரைவில் தண்டனை பெற்றுத் தந்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டு தெரிவித்தார்.

போக்சோ சட்டம்

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுருக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.

போக்சோ சட்டத்தின் அம்சங்கள்

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது.

சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது. மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்