கார்த்திகை தீபம் 2022ல் வரும் கார்த்திகை மாதம் 20ம் தேதி, டிசம்பர் 6ம் நாள் செவ்வாய் கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக, அன்று காலை 4 மணியளவில், பரணி தீபம் ஏற்றப்படும்.


திருக்கார்த்திகை தீபம்:


கார்த்திகை மாதம் என்றாலே நினைவுக்கு வருவது கார்த்திகை தீபத்தருநாள் தான். கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் மற்றும் கோவிலில் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். கார்த்திகை மாதத்தில்‌ கார்த்திகை நட்சத்திரமும்‌, பெளர்ணமியும்‌ ஒன்றாக வரக்கூடிய நன்னாளில்‌ திருக்கார்த்திகை தீபம்‌ கொண்டாடப்படுகிறது


உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும் பஞ்சபூத தளங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கார்த்திகை நன்னாளில் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டு இருக்கும். அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து மாலையில் மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும். அனைத்து சிவன் ஆலயங்கள் மற்றும் முருகன் ஆலயங்களிலும் சிறப்பாக கார்த்திகை தீபம் கொண்டாப்படும். மக்கள் வீடுகளிலும் இனிப்புகள் வைத்து பூஜை செய்து, வீடுகள் முழுவதும் தீபம் ஏற்றி, வாழ்வின் இருள் நீங்கி ஒளி வீச கடவுளை வழிபடுவர்.


மகாதீபம்:


கார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. அதையொட்டி தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் கோவில் 5-ஆம் பிரகாரத்தில் சுவாமி பவனி நடைப்பெற்று வருகிறது. வரும் டிசம்பர் 6ஆம் தேதி மாலை மகா தீபம் ஏற்றப்படும்.


கார்த்திக்கை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில்  பரணி தீபம்‌ , அண்ணாமலையார்‌ தீபம்‌ (மகா தீபம்‌) விஷ்ணு தீபம்‌, உள்ளிட்ட 5 தீபங்கள் ஏற்றப்படும்.


டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலையில்‌ பரணி தீபம்‌ அண்ணாமலையார்‌ கருவறையில்‌ ஏற்றப்பட்டு, பின்னர்‌ அர்த்த மண்டபத்தில்‌ ஐந்து தீபங்களாக இவை காட்டப்படும்‌. கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில்‌ இந்த தீபம்‌ காட்டப்படுவதால்‌ 'பரணி தீபம்‌" என்று பெயர்‌ பெற்றது. அதைதொடர்ந்து அன்று  மாலை 6 மணிக்கு, சிவனே மலையாக காட்சி தரும் 2,668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.


அர்த்தநாரீஸ்வரர்:


2668 அடி உயர மலை உச்சியில் 5 அடி உயரம், 250 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகளும் மகாதீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும்.  இந்த தீப கொப்பரை  விஷ்ணு, சிவன் என்ற மூன்று அடுக்குகளால் ஆனது தான் என நம்பப்படுகிறது. சிவனும் சக்தியும் ஒன்று என்ற தத்துவதை விளக்கும் வகையில் டிசம்பர் 6ஆம் தேதி கோவில் வளாகத்தில் தீபதரிசன மண்டபம் எதிரில் சுமார் 6 மணி அளவில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி தாண்டவம் ஆடிய பின்னரே மலையின் உச்சியில் உள்ள கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, மலை உச்சியில் நிலை நிறுத்தப்படும் மகாதீப கொப்பரைக்கு பாரம்பரிய வழக்கப்படி சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். 


மகா தீபம் ஏற்றிய பின்னரே மக்கள் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.