மேலும் அறிய

அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூர் அதிர்ச்சி! ரூ.3000 கோடி இழப்பு: முதல்வர் ஸ்டாலின் அவசர கோரிக்கை!

தமிழ்நாட்டின் ஜவுளி தலைநகரமான திருப்பூர் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதைக் குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். 

அமெரிக்கா இந்தியாவின் மீது விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பால், திருப்பூரில் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாகவும் உடனடியாக நிவாரணம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’அமெரிக்கா, இந்தியா மீது விதித்துள்ள வரி 50% ஆக உயர்த்தப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக ஜவுளி மையமான திருப்பூரில் கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி வர்த்தகப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஆயிரக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன. எனவே நமது தொழில்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடி நிவாரணம் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களைக் கொண்டு வரக் கோரி மத்திய அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

நடந்தது என்ன?

இந்தியா ரஷ்ய நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதாலேயே உக்ரைன் - ரஷ்யா போரில், ரஷ்யாவுக்கு அதிக நிதியுதவி கிடைப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து எந்த பொருளையும் இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். 

எனினும் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இதை எதிர்த்து ட்ரம்ப், இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். அவர் அறிவித்த 50 சதவிகித வரியானது, நேற்று (ஆக. 27) நள்ளிரவு முதல் இந்திய பொருட்கள் மீது அமலுக்கு வந்துள்ளது.

கடும் பின்னடைவு

இதனால், உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் கடும் பின்னடைவைச் சந்திப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்று வழியை ஏற்படுத்த வேண்டும் என்பதே, மத்திய அரசிடம் வணிகர்கள் தற்போது முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் ஜவுளி தலைநகரமான திருப்பூர் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதைக் குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
"பணத்தை கொடு...வெளியே சொன்னா வெட்டுவோம்" – டீ கடையில் அரங்கேறிய திகில் சம்பவம்
"வாழ்க்கையை சீரழித்த குடி" பிரிந்து சென்ற மனைவியை அழைக்கச் சென்ற கணவனுக்கு நேர்ந்த சோகம்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Weather News: மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மதுராந்தகம், தாராபுரத்தில் கனமழை? இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Embed widget