"வராங்க.. பெஞ்சை தேச்சுட்டு போறாங்க" - அதிகாரிகளின் அலட்சியத்தை மேடையிலேயே கிழித்து தொங்கவிட்ட விவசாயிகள்
திருப்பத்தூரில் அதிகாரிகள் சரியாக வேலை செய்யவில்லை என்று குறைத்தீர் கூட்டத்தில் விவசாயிகள் தங்களின் ஆதங்கத்தை கூறியதால் பரபரப்பு.

திருப்பத்தூர்: "ஒரு பெட்டிஷன் கூட சரியாக விசாரிப்பதில்லை அதிகாரிகள் வராங்க பெஞ்ச தேச்சுட்டு போறாங்க. சின்ன சின்ன விஷயத்திற்கு கூட பிச்சை எடுக்க வேண்டிய நிலைமை உள்ளது” என விவசாயிகள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து குறை தீர்ப்பு கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் துவங்கிய முதலே பலமுறை விவசாயிகள் குறை சம்பந்தமான தீர்வுக்கு கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை, பெயர் அளவிற்கு மட்டுமே விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெறுகிறது என்று ஆதங்கம் தெரிவித்து கூட்டம் நடைபெற்று வந்தது.
அப்போது வடிவேல் சுப்பிரமணியம் என்ற விவசாயி ஒருவர் திடீரென எழுந்து மிகவும் ஆவேசப்பட்டு ஒரு பெட்டிஷனை கூட அதிகாரிகள் சரியாக விசாரிப்பதில்லை பெஞ்ச தேச்சிட்டு போறாங்க, சின்ன சின்ன விஷயத்துக்கு கூட நாங்க பிச்சை எடுக்க வேண்டிய நிலைமையாக உள்ளது. கோவிந்தாபுரம் ஏரியிலிருந்து வெளியே வரும் தண்ணீர் வாணியம்பாடி அரசு மருத்துவமனை பதிவில் அதிகமாக தீங்குவதற்கு காரணம் அதே பகுதியில் தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவர் கட்டியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் அரசுக்கு சொந்தமான லைப்ரரி எந்த ஒரு அனுமதி இல்லாம இடிச்சாங்க, ஆனால் பிரச்சனை என்று கூறிய தனியார் பள்ளியின் காம்பவுண்டை இதுவரைக்கும் அதிகாரிகளால் இடிக்க முடியவில்லை.
ஏரியில் இருந்த 120 குடும்பங்களை ஒரே இரவில் அதிகாரிகள் அகற்றினர். ஆனால் தனியார் பள்ளியில் சுவரை அதிகாரிகளால் டச் பண்ண முடியல அப்படின்னா யாருக்காக இயங்குகிறது இந்த அரசியல், எதற்காக சார் புது பணித்துறை இயங்குகிறது. எதற்காக நாங்க கத்துறோம், எதற்காக அதிகாரிகள் இருக்கிறாங்க ஆதங்கப்பட்டு பேசி விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















