மேலும் அறிய

நாய் கடிச்சதுக்கு ‘இந்தா 100 ரூபாய் புடி ஊசி போட்டுக்கோ’ என கேவலமா பேசுறாங்க - பரிதாபமாக சொன்ன சிறுமி

என்ன போல குழந்தைகளை நாய் புரட்டி புரட்டி கடிக்குது நடவடிக்கை எடுங்க சார்! நாய் கடிச்சதுக்கு இந்தா 100 ரூபாய் புடி ஊசி போட்டுக்கோ என கேவலமா பேசுறாங்க! பள்ளி சீருடையில் சிறுமி மனு

திருப்பத்தூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் நாய்க்கடி பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி சிறுமி பள்ளி சீருடையில் வந்து மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புரட்டி புரட்டி கடித்த நாய்

திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகள் நிவேதிதா (12).  இந்தச்சிறுமி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பள்ளி சீருடையில் வந்து  மனு ஒன்று அளித்தார்.

அந்த மனுவில், தாங்கள் கிராமத்தில் பவுனம்மாள் ,ராஜ்கமல் என்பவர் வளர்த்த வரும் நாய் 15 க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது. அதேபோல என்னையும் புரட்டி புரட்டி கடித்தது. இதுகுறித்து உரிமையாளர்களிடம் கேட்டபோது, ‘இந்தா நூறு ரூபா வச்சுக்கோ போய் ஊசி போட்டுக்கோ’ என கேவலமா பேசுறாங்க .

இதுகுறித்து இதற்கு முன்பாக நாயை அப்புறப்படுத்த வேண்டும் என மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தயவு செய்து என்னை போல் குழந்தைகளை கடிக்கும் இந்த நாயை அப்புறப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறுமி பள்ளி சீருடையில் வந்து மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாய் கடிச்சதுக்கு ‘இந்தா 100 ரூபாய் புடி ஊசி போட்டுக்கோ’ என கேவலமா பேசுறாங்க - பரிதாபமாக சொன்ன சிறுமி

தமிழ்நாட்டில் தொடரும் நாய்களின் அட்டகாசம்

தமிழ்நாட்டில் தெரு நாய்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. தெருநாய்களின் அட்டகாசத்தால் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தெரு நாய்களை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என தொடர்ந்து, பல தரப்பு மக்கள் கோரிக்கை வைத்தாலும் இதுவரை அரசு சார்பில் முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. 

தமிழ்நாடு கால்நடைத்துறை தகவலின்படி, தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. சென்னை போன்ற ஒரு சில பெரு நகரங்களில் மட்டும் தெரு நாய்களுக்கு "ரேபிஸ்" தடுப்பூசி போடப்படுவதாகவும், பிற இடங்களில் போடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 

6.50 லட்சம் பேர் பாதிப்பு

தொடர்ந்து நகர் பகுதிகளை காட்டிலும் கிராமப் பகுதிகளில், நாய்க்கடிகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாய் கடிகளால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது, அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நாய் கடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.80 லட்சமாக இருந்தது. இதில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, 43 பேர் உயிரிழந்தனர். 

கடந்த ஆண்டைக் காட்டிலும் 2025ஆம் ஆண்டு நாய் கடியால், பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 6.50 இலட்சமாக உயர்ந்துள்ளது. நாய் கடிகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 33 ஆக உள்ளது. 2024ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டு ரேபிஸ் உயிரிழப்புகள் குறைவாக இருந்தாலும், கூடுதலாக 1.70 லட்சம் மக்கள் நாய் கடியால் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

" வழக்கு குறித்து பேசனும் " தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! காவலருக்கு அதிரடி உத்தரவு
மானை வேட்டையாட சென்றவர் மரணம்: உடலை ரகசியமாக எரித்த சம்பவம்! போலீஸ் விசாரணை
மானை வேட்டையாட சென்றவர் மரணம்: உடலை ரகசியமாக எரித்த சம்பவம்! போலீஸ் விசாரணை
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
விஜய் அதிரடி வாக்குறுதிகள்! மகளிர் தினத்தில் வெளியான 12 முக்கிய அறிவிப்புகள்! முழு விவரம் என்ன?
விஜய் அதிரடி வாக்குறுதிகள்! மகளிர் தினத்தில் வெளியான 12 முக்கிய அறிவிப்புகள்! முழு விவரம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
TVK Vijay: விஜய்க்கு போட்டியாக களமிறங்கப்போகும் விசிக? தளபதிக்கு எதிராக இறங்கப்போவது இவரா?
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Election 2026: பதற்றமான ஏரியாக்கள் எது? லிஸ்ட் எடுக்கும் போலீஸ்! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி 'பிளான்'!
Embed widget