மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு  பாஜக கொடுத்தது அல்வாதான் என திமுகவின் தமிழ்நாடு தலைகுனியாது பொதுகூட்டத்தில் திமுகவினர் அல்வா கொடுத்தது  நிகழ்வு கவனத்தை ஈர்த்தது. 

தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டம்:

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையோட்டி திமுக சார்பில் பல்வேறு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்கிற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சதிஷ் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாட்டிற்கு பாஜக கொடுத்த அல்வா

இந்த பொது கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி,  கொள்கைப் பரப்பு செயலாளர் சபாபதி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பின்னர் பேசிய சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தமிழகத்திற்கு பட்ஜெட்டில் பாஜக அல்வா தான் கொடுத்துள்ளார்கள் என பேசினார்.

பொதுகூட்டத்தில் கலந்து பொதுமக்கள் மக்களுக்கு இது தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் பாஜக கொடுத்தது அல்வா மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு திமுகவினர் கொடுத்தனர்.உடன் இந்த பொதுகூட்டத்தின் போது மாவட்ட ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் என 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் விளாசல்: 

நேற்று வெளியான பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு  புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்ன முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்து இருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் எப்படியும் தோல்வி உறுதி என்பதால் தமிழ்நாட்டை மீண்டும் புறக்கணித்த ஒன்றிய பா.ஜ.க. அரசுதமிழ்நாட்டுக்குப் புதிய திட்டங்களும் இல்லை; ஏற்கெனவே வரவேண்டிய ஜல்ஜீவன் & கல்வி நிதியும் இல்லை. 

வழக்கமாகச் சொல்லும் திருக்குறள் கூட இம்முறை இல்லை. அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் கேட்டால், 5 ஆண்டுத்திட்டம் போல வாசித்திருக்கிறார்கள். மொத்தத்தில், யுனியன் பட்ஜெட் ஏமாற்ற பட்ஜெட் என முதல்வர் விமர்சித்திருந்தார்