கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் உறவு! திருமணமாகி 40 நாட்களில் கண்ணீரில் தவிக்கும் இருட்டுக்கடை உரிமையாளரின் மகள்!
நெல்லை இருட்டைக்கடை அல்வா கடையின் உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் வரதட்சனை புகார் அளித்துள்ளார்.

நெல்லை இருட்டைக்கடை அல்வா கடையின் உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் வரதட்சனை புகார் அளித்துள்ளார். திருமணமான 40 நாட்களிலேயே வரதட்சனை புகார் அளித்துள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையம், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த கணவர் பல்ராம் சிங் என்பவர் மீது கவிதா சிங்கின் மகள் புகார் அளித்துள்ளார். இருட்டுக்கடை உரிமையை தனது பெயருக்கு மாற்றித்தரும்படி வரதட்சனை கொடுமை செய்வதாக புகார் அளித்துள்ளார்.
Just In




இதுகுறித்து இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா சிங் கூறுகையில், “எனது மகளுக்கு கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவர் திருமணம் செய்துகொண்டார். அவர் தற்போது எனது மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் இருட்டுக்கடையை அவர் பெயருக்கு மாற்றம் செய்து தர வேண்டும் என மிரட்டுகிறார். அவர் மிரட்டலுக்கு பயந்து எனது மகள் இப்போது எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார். வரதட்சனை கேட்டு மிரட்டும் மகளின் கணவர், அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளேன்.
தனது மருமகன் வேறு ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து எனது மகளை துண்புறுத்துகிறார். உடல் அளவில் அவளை ரொம்ப கஷ்டப்படுத்தியுள்ளனர். அவள் என் வீட்டுக்கு வந்ததும் நான் மயக்கமடைந்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
முதலமைச்சரிடம் கெஞ்சி கேட்டுக்கிறேன். எங்களுக்கு உதவி செய்யுங்க. இது ஒரு பொண்ணோட வாழ்க்கை” என கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், “அவரும் அவருடைய சகோதரரும் டிவோர்ஸ் கொடுத்துவிடு என மிரட்டுகின்றனர். அவ்வளவுதான் உன் வாழ்க்கை என மிரட்டுகின்றனர். என் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் லிவ் இன் டுகெதெரில் இருப்பதாக கூறுகிறார்.” எனத் தெரிவித்தார்.