விழுப்புரம் : சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே 25 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் விரைவில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
"புதிய பேருந்து நிலைய" கனவு
வட தமிழகத்தையும் தென் தமிழகத்தையும் இணைக்கும் முக்கிய மையப்புள்ளியான திண்டிவனம் நகரம், பல தசாப்த கால போராட்டத்திற்குப் பிறகு ஒரு புதிய அடையாளத்தைப் பெறுகிறது. 1991-ம் ஆண்டு முதல் கிடப்பில் போடப்பட்ட "புதிய பேருந்து நிலைய" கனவு, தற்போது நனவாகி திறப்பு விழாவுக்குத் தயாராகியுள்ளது.
திண்டிவனம் பேருந்து நிலையம் Tindivanam New Bus Stand Location
பேருந்து நிலையத்துக்கான இடத்தைத் தோ்வு செய்வதில் அரசியல் கட்சியினரிடையே நீடித்த கருத்தொற்றுமை இன்மையால் புதிய பேருந்து நிலையப் பணி என்பது தொடா்ந்து தாமதமாகி வந்தது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் 6 ஏக்கர் பரப்பளவில் திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என அறிவித்தார். அந்த வகையில், தற்போது திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி நிறைவு பெற்றது.
ஏன் இந்த பேருந்து நிலையம் முக்கியமானது?
துர்பாக்கிய நிலைக்கு முற்றுப்புள்ளி: கடந்த பல ஆண்டுகளாகப் பேருந்து நிலையம் இன்றி, மேம்பாலத்தின் அடியில் ஆபத்தான முறையில் பேருந்து ஏறி வந்த திண்டிவனம் மக்களின் துயரம் இனி முடிவுக்கு வருகிறது.
முதலமைச்சரின் மெகா திட்டம்:
சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6 ஏக்கர் பரப்பளவில் சகல வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் நகராட்சி நிர்வாகத் துறையால் கட்டப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள் (Highlights):
இந்த புதிய பேருந்து நிலையம் வெறும் பேருந்து நிறுத்தமாக மட்டுமின்றி, ஒரு வணிக வளாகம் போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, 3,110 சதுர மீட்டர் பரப்பளவில் பிரதான கட்டிடம் மற்றும் 50 பேருந்துகள் ஒரே நேரத்தில் நிற்கும் வசதி.
பயணிகளை வியக்கவைக்கும் நவீன வசதிகள்
புதிய பேருந்து நிலையம் வெறும் போக்குவரத்து மையமாக மட்டுமின்றி, பயணிகளுக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளையும் கொண்டுள்ளது:
வணிக வளாகம்: 61 கடைகள் மற்றும் சைவ, அசைவ உணவகங்கள்.
பயணிகள் நலன்: 10 விசாலமான காத்திருப்பு கூடங்கள், பொருட்கள் பாதுகாப்பு அறை (Cloak Room).
முன்பதிவு மையங்கள்: அரசுப் பேருந்து மற்றும் ரயில் பயணங்களுக்கான தனித்தனி முன்பதிவு அறைகள்.
பணியாளர் வசதி: ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான ஓய்வறைகள், நேரக்காப்பகம்.
பாதுகாப்பு: 24 மணி நேரக் கண்காணிப்புடன் கூடிய காவல்துறை கட்டுப்பாட்டு அறை மற்றும் 'நான் உங்களுக்கு உதவலாமா' உதவி மையம்.
சுகாதாரம்: நவீன கழிப்பறை வளாகங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக ஓய்வறைகள் மற்றும் முறையான கழிவுநீர் சேகரிப்புத் தொட்டி (300 ச.மீ).
தமிழகத்தின் மிக முக்கிய போக்குவரத்து சந்திப்பான திண்டிவனம் நகரின் நீண்ட கால கோரிக்கையான புதிய பேருந்து நிலையம், தற்போது பொலிவு பெற்று திறப்பு விழாவுக்குத் தயாராகியுள்ளது. மேம்பாலத்தின் அடியில் பேருந்து ஏறும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சகல வசதிகளுடன் இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது.
விரைவில் மெகா திறப்பு விழா!
தற்போது கட்டுமானப் பணிகள் 100% நிறைவடைந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய இரண்டையும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார். இதற்காக பேருந்து நிலையம் எதிரே உள்ள மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
"தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் நிற்பதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு இனி நிரந்தர தீர்வு கிடைக்கும். திண்டிவனம் புதுப்பொலிவுடன் ஜொலிக்கப் போகிறது!" - என நகராட்சி அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
