மேலும் அறிய

ஸ்டாலின் சர்வாதிகாரி ஆக வேண்டிய நேரம்! காவலர் கொலை, ஊடகவியலாளர் தாக்குதல்- ராமதாஸ் கேள்வி!

கோயில் காவலாளியை தாக்கும்படி காவலர்களுக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் மற்றும் பொய்புகார் அளித்த நிகிதா ஆகியோருடன் ஊடகவியலாளர்களை ஒடுக்க நினைத்து செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ்!

முதலமைச்சர் சர்வாதிகாரி எனக் கூறியதை மெய்ப்பிக்கும் நேரம் வந்துவிட்டது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’நாமக்கல்லில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு கடந்த 03.07.2022-ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ''மக்களின் தேவைகளை அறிந்து, புரிந்து அவர்களுக்கு சேவை செய்தால், நிச்சயம் உங்களை நோக்கி மக்கள் வரத்தான் செய்வார்கள். அதேநேரத்தில் நீங்கள் தவறு செய்துவிட்டால், உங்களைவிட்டு மக்கள் விலகுவார்கள்.

விலகுவதோடு மட்டுமல்ல, உங்களை புறக்கணிப்பார்கள் என்று பேசியதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பேசினார்.

அஜித் குமார் படுகொலை

இதற்கிடையே சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் என்பவர் மீது கோயிலுக்கு வந்த நிகிதா என்பவர் நகை திருட்டு குறித்து கொடுத்த புகாரின் பேரில் அவசர அவசரமாக கடந்த ஜூன் 17-ம் தேதி தனிப்படைக்காவலர்கள் 5 பேர், விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றனர். இவ்வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டு நடைபெற்ற விசாரணையில் புகார்தாரர் நிகிதாவுக்காக அரசின் உயர் பதவியில் உள்ள சிலர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அஜித்குமார் அடித்தே கொல்லப்பட்டார் என்பது தெளிவாகிறது. 

இந்நிலையில் நேற்று கொலை செய்யப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார் தாயார்  மாலதி, பொய் புகார் அளித்த நிகிதாவையும், அவருக்கு சாதகமாக போலிசாரை கொண்டு அஜித்குமாரை கொலை செய்ய தூண்டியவர்கள் மீதும் சி.பி.ஐ நடவடிக்கை எடுத்து கைது செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். 

செய்தியாளர் தாக்குதல்

அண்மையில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கனிமவளக்கொள்ளையை உலகிற்கு படம்பிடித்து காட்ட குளித்தலை அருகே குவாரிக்கு செய்தி சேகரிக்க சென்ற கதிரவன் என்ற செய்தியாளரையும், அவரின் கேமராமேன் செபாஸ்டியன் உள்ளிட்ட 5 பேர் மீதும் அங்கிருந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் இன்னமும் நடவடிக்கை எடுத்து அக்கும்பலை காவல்துறை கைது செய்யவில்லை. இக்கும்பலை இயக்கியது திமுக எம்.எல்.ஏ.தான் என கூறப்படுகிறது.

அப்படியெனில் “ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அன்று முதலமைச்சர் கூறியது அப்பாவி மக்களைப்பார்த்துதானா என்ற கேள்வி எழுகிறது. 

சர்வாதிகாரி என்று மெய்ப்பியுங்கள்

எனவே உடனடியாக கோயில் காவலாளியை தாக்கும்படி காவலர்களுக்கு அழுத்தம் கொடுத்தவர்கள் மற்றும் பொய்புகார் அளித்த நிகிதா ஆகியோருடன் ஊடகவியலாளர்களை ஒடுக்க நினைத்து செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து ஒழுங்கீனமும், முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி  நடவடிக்கை எடுத்து, நான் சர்வாதிகாரிதான் என்று கூறியதை முதலமைச்சர் அவர்கள் மெய்ப்பிக்க வேண்டும்’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: உங்க கூட்டணியை பயப்படாம இருக்க சொல்லுங்க.. பிரதமருக்கு உதயநிதி பதிலடி!
Udhayanidhi Stalin: உங்க கூட்டணியை பயப்படாம இருக்க சொல்லுங்க.. பிரதமருக்கு உதயநிதி பதிலடி!
Vijay Sangeetha Divorce: அரசியல் நாகரிகம் எங்கே? மெளனம் காக்கும் விஜய்... மாதர் சங்கம் சரமாரி கேள்வி
Vijay Sangeetha Divorce: அரசியல் நாகரிகம் எங்கே? மெளனம் காக்கும் விஜய்... மாதர் சங்கம் சரமாரி கேள்வி
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Backs Iran: “ஈரானுக்கு நாங்க இருக்கோம்“ சீனுக்கு வந்த சீனா; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மெசேஜ் - என்ன நடக்குமோ.?
“ஈரானுக்கு நாங்க இருக்கோம்“ சீனுக்கு வந்த சீனா; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மெசேஜ் - என்ன நடக்குமோ.?
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
Embed widget