விழுப்புரம் : இருசக்கர வாகனத்தில் கார் மோதாமல் இருக்க கார் ஓட்டுனர் பிரேக் அடித்தபோது கட்டுபாட்டை இழந்த கார் சாலை ஓர மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானதில் ஒரே குடும்பத்தைச் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

Continues below advertisement

திண்டிவனம் அருகே கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி, 6 பேர் படுகாயம்!

திருவள்ளூர் மாவட்டம், காரமடையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விழுப்புரம் அருகே உள்ள மதுரவீரன் கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பியபோது, திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஆறு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடத்து எப்படி ?

காரமடைப் பகுதியில் இருசக்கர வாகன சர்வீஸ் சென்டர் நடத்திவரும் வெங்கடேசன் (வயது 40), தனது மனைவி கல்பனா, தாய் திருப்பாவை, தந்தை கோவிந்தராஜ், இரண்டு குழந்தைகள் (மிதுலா ஸ்ரீ, ஹனன்யா ஸ்ரீ), அக்கா பிருந்தா, மாமா சரவணன் உட்பட மொத்தம் ஒன்பது பேருடன் காரில் விழுப்புரம் அருகே உள்ள மதுரவீரன் கோவிலுக்குச் சென்றுள்ளார். சாமி தரிசனம் முடிந்த நிலையில், இன்று இரவு அவர்கள் அனைவரும் மீண்டும் காரில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

Continues below advertisement

திண்டிவனம் அருகேயுள்ள  தென்பசியார் அருகே  தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தபோது, முன்னாள் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு நபரின் மீது மோதாமல் இருக்க, கார் ஓட்டி வந்த வெங்கடேசன் காரை திடீரெனத் திருப்பியுள்ளார். இதில்,  கட்டுப்பாட்டை இழந்த கார் , திண்டிவனம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த  மரத்தின் மீது பயங்கரமாக மோதி , சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மூவர் பலி, ஆறு பேர் காயம்

இந்தக் கோர விபத்தில், காரில் பயணித்த வெங்கடேசனின் மனைவி கல்பனா , அவரது தாய் திருப்பாவை, மற்றும் தந்தை கோவிந்தராஜ்  ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த வெங்கடேசனின் இரண்டு பெண் குழந்தைகள்  மிதுலா ஸ்ரீ மற்றும் ஹனன்யா ஸ்ரீ , அவரது அக்கா பிருந்தா, மற்றும் மாமா  சரவணன் ஆகியோர் உடனடியாக மீட்கப்பட்டு, திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற தென்கலவாய் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரும் காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசார் விசாரணை

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கோர விபத்து தொடர்பாக  மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து நடந்ததன் காரணமாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார்  அரை மணி நேரத்திற்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு , வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர், போலீசார் போக்குவரத்தைச் சீர் செய்தனர்.