தூத்துக்குடி பெண் நெல்லையில் வெட்டிக் கொலை !! தம்பி மற்றும் நண்பர்கள் செய்த பயங்கர காரியம்
நெல்லையில் பரபரப்பு: 18 வயது இளைஞருடன் பழக்கம் – பெண்ணை வெட்டிப் படுகொலை செய்த தம்பி

கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த மனைவி
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே சென்னல்ப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகள் முத்துமாலை ( வயது 36 ) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 7 வயதில் மகள் உள்ளார். முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு ஏற்பட்ட நிலையில் , முத்துமாலை இரண்டாவது திருமணமாக ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
தற்போதைய கணவர் பெங்களூருவில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரிந்து முத்துமாலை தனது மகளுடன் திருநெல்வேலி தியாகராஜ நகர் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.
கண் இமைக்கும் நேரத்தில் அரிவாள் வெட்டு
இரவில் முத்து மாலை தனது வீட்டின் முன்பு மகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த இரண்டு பேர் திடீரென அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்துமாலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
ஆரம்பத்தில் யார் இந்த தாக்குதலை நடத்தியது என்பது குறித்து குழப்பம் நிலவிய நிலையில், பின்னர் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்தது முத்துமாலையின் சகோதரர் இசக்கி பாண்டியன் என்பதும் , அவருடன் அவரது நண்பர்கள் பன்னீர்செல்வம் மற்றும் சிவா ஆகியோர் இணைந்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியதும் தெரிய வந்துள்ளது.
18 வயது இளைஞருடன் பெண்ணுக்கு ஏற்பட்ட பழக்கம்
விசாரணையில், முத்துமாலைக்கு ஆழ்வாநேரி பகுதியை சேர்ந்த 18 வயதான லாரி டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை பெற்றோர் மற்றும் சகோதரர் கண்டித்தும் அவர் அந்த தொடர்பை கைவிடவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இசக்கி பாண்டியன், தனது நண்பர்கள் பன்னீர்செல்வம் மற்றும் சிவாவுடன் சேர்ந்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். முத்துமாலை தனது வீட்டின் அருகே குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்த போது, மூவரும் அங்கு வந்து சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தற்போது இசக்கி பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















