மேலும் அறிய

Thoothukudi Ship Building: அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?

தென் கொரியாவைச் சேர்ந்த கப்பல் கட்டுமான நிறுவனம் ஒன்று, தூத்துக்குடியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த ஹெச்டி ஹூண்டாய் நிறுவனம்தான், தூத்துக்குடியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், தூத்துக்குடியில் வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரூ.10,000 கோடியில் கப்பல் கட்டும் தளம்

இந்தியாவில், கப்பல் கட்டுமானத் துறையை மேம்படுத்த, மாநில அரசுடன் இணைந்து, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக அளவில் மிகப்பெரும் கப்பல் கட்டுமான நிறுவனமாக இருந்து வரும் தென் கொரியாவைச் சேர்ந்த ஹெச்டி ஹூண்டாய் நிறுவனத்திடம், மத்திய அரசு பேச்சுவாத்த்தை நடத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து, இந்த நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய கப்பல் கட்டுமான தளங்களை அமைக்க இருப்பதாக தெரிகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் அவை அமைய உள்ளதாக கூறப்படுகிறது. 

அதன்படி, ஹெச்டி ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில், கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்துடன் இணைந்து, மிகப்பெரிய கப்பல் கட்டுமானத் தளங்களை நிறுவ உள்ளது. இதற்காக, இந்தியாவில் பல இடங்களில் ஆய்வு நடத்தி, இடத்தை தேர்வு செய்து, இறுதி செய்திருப்பதாக தெரிகிறது.

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில், மிகப் பெரிய அளவிலான கப்பல் கட்டுமான மற்றும் பழுது பார்க்கும் தளத்தை அமைக்க உள்ளது இந்நிறுவனங்கள். இதற்காக 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கப்பல் கட்டுமானத் துறையில் இந்தியாவின் இலக்கு என்ன.?

2030-ம் ஆண்டுக்குள், கப்பல் கட்டுமானத் துறையில், முதல் 10 நாடுகளுக்குள்ளும், 2047-ம் ஆண்டுக்குள், முதல் 5 நாடுகளுக்குள் இடம் பிடிக்க வேண்டும் என்று இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஏற்கனவே பட்ஜெட்டில், இந்தியாவில் கப்பல் தொடர்பான தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்பு வெளியானது. அதன் ஒரு பகுதியாகத்தான், ஹெச்டி ஹூண்டாய் நிறுவனம், இந்தியாவில் அதன் கப்பல் கட்டுமான தளத்தை அமைப்பதற்கு முன்வந்துள்ளது. 

அதன்படி, தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்நிறுவனம் 10,000 கோடி முதலீடு செய்ய இருப்பது, அம்மாவட்டத்திற்கு மிகப்பெரும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பை கொடுக்கும்.

ஹெச்டி ஹூண்டாய் மற்றும் கொச்சின் ஷிப்யார்டு நிறுவனங்கள், இது தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு அரசு மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடமும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சமீபத்தில் நிதித்துறை அமைச்சகத்தின் செலவின நிதி கமிட்டி, கப்பல் கட்டுமான தளங்களை அமைப்பதற்கு 18,090 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவது குறித்து ஒரு கொள்கைக்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
இந்தியாவிற்கு க்ரீன் சிக்னல்.. க்ரீன்லாந்தால் ஐரோப்பிய நாடுகள் ரெட் சிக்னல் - அடங்காத ட்ரம்ப் கொடுத்த வார்னிங்
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
ICC Ban: ஐசிசி கொடுத்த வார்னிங்.. இந்தியா வருமா? ”அதிசயம் நிகழும் என எதிர்பார்ப்பு” வங்கதேசத்தின் முடிவு என்ன?
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
சென்னை வொண்டர்லா: ஒரு மாதத்தில் மாறியதா அனுபவம்? | ABP Field Report
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
Rajinikanth: ரஜினிதான் புருஷன் ஆக வேண்டியதா? ஹைப்பை ஏற்றிய சுந்தர் சி பட ட்ரெயிலர்!
Rajinikanth: ரஜினிதான் புருஷன் ஆக வேண்டியதா? ஹைப்பை ஏற்றிய சுந்தர் சி பட ட்ரெயிலர்!
Embed widget