திருவண்ணாமலை அடுத்த  வேட்டவலம் பெரியார் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி சிலம்பரசன் இவரது 7 வயது மகன் அஸ்வின் அரசு பள்ளியில் பயின்று வருகின்றார். அஸ்வின் நேற்று முன்தினம் தெருவில் நண்பர்களுடன் கோலி விளையாடி கொண்டிருந்தார். அப்போது, கோலியினை வாய்ல் போட்டுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக வாயில் போட்டு வைத்து இருந்த  கோலி குண்டு அஸ்வினின் தொண்டைக்குள் சிக்கி உள்ளது. வழுவழுப்பான உருண்டையான இந்த கோலி குண்டு, தொண்டையின் இறுதியிலும் மற்றும் உணவுக்குழாயின் தொடக்க பகுதியில் சிக்கிக்கொண்டது. இதனால் சிறுவன் துடிதுடித்துள்ளார். அதனை கண்ட அவரது பெற்றோர் அதே பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். ஆனால், ஆபத்தான பகுதியில் கோலி குண்டு சிக்கி உள்ளதால், அதனை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 



அங்குள்ள அரசு மருத்துவர்கள் எக்ஸ்-ரே பரிசோதனை செய்ததில் சிறுவன் அஸ்வினின் தொண்டையில் சிக்கி இருந்த கோலி குண்டு இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டது. இந்நிலையில், காது, மூக்கு, தொண்டை சிறப்பு பிரிவு துறைத்தலைவர் இளஞ்செழியன் தலைமையில், மருத்துவர்கள் சிந்துமதி, கமலக்கண்ணன் மற்றும் மயக்கவியல் மருத்துவர் செந்தில்ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர், சிறுவன் உணவு குழாயில் சிக்கிய கோலியினை எடுக்க முயற்சி செய்தனர். சுமார் 3 மணி நேர முயற்சிக்கு பிறகு அறுவை சிகிகிச்சை இன்றி என்டோஸ்கோபி முறையில் தொண்டையில் சிக்கியிருந்த கோலி குண்டினை வெற்றி கரமாக அகற்றினர்.



மேலும், அதே நாளில் செங்கம் அடுத்த மேல் புழுதியூர் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி முபாரக்பாஷா என்பவரின் 5 வயது மகன் முத்தார்கான் காதில் போட்டுக் கொண்ட விளையாட்டு பொம்மைகளில் பயன்படுத்தும் சிறிய பேட்டரியை, மருத்துவர்கள் குழுவினர் நீண்ட முயற்சிக்கு பின்னர் அறுவை சிகிச்சை இன்றி வெற்றிகரமாக அகற்றி இருந்தனர்.


இது குறித்து மருத்துவர் இளஞ்செழியன் கூறுகையில்: கோலி குண்டு வழுவழுப்பான தன்மையுடையது. அதனை அகற்றும்போது மெது மெதுவாக உணவு குழாயில் நழுவிச்சென்றது. மேலும் எங்களுக்கு மிகவும் சவாலான செயலாகவும் இருந்தது. அடுத்தகட்டமாக நாங்கள் அதிநவீன மருத்துவமுறைகளை கையாண்டு அறுவை சிகிச்சையின்றி கோலி குண்டை அகற்றினோம்.



அதேபோன்று ,  சிறுவனின் காதில் சிக்கிய பேட்டரி மிகவும் ஆபத்தானது. ஆனால் இவர்கள் ஒரு நாள் கழித்து தாமதமாக அழைத்து வந்தனர். அப்படி இருந்தும் நாங்கள் அதனை அறுவை சிகிச்சை இன்றி அகற்றினோம். இவர்கள் இன்னும் தாமதத்திருந்தால், பேட்டரியில் இருந்து அமிலம் கசிந்து இருந்து இருக்கும் மேலும் சிறுவன் கேட்கும் திறனை காது இழந்திருக்கும். குழந்தைகள் உள்ள வீட்டில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் சிறுவர்களுக்கு எதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாது. அதுமட்டுமின்றி ஈசியாக முழுங்ககூடிய சிறிய பொருட்களை குழந்தைகளுக்கு விளையாட கொடுக்க வேண்டாம் என மருத்துவர் அறிவுரை கூறினார்.