பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக திருவண்ணாமலைக்கு வந்திருந்தார். அப்போது திருவண்ணாமலை மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக பிரமுகர்கள் மீது பாலியல் வழக்கு உறுதியானால் பாஜக தனது கடமையை பாரபட்சமின்றி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கும் இதே போன்று மற்ற கட்சிகளை சார்ந்தவர்கள் பாலியல் மற்றும் ஊழல்கள் செய்துள்ளனர் அவர்களுடைய பட்டியலும் எங்கள் இடத்தில் உள்ளது தக்க சமயத்தில் அதை நாங்கள் வெளியிடுவோம். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குரலில் வந்த ஆடியோ எடிட்டிங் செய்யப்பட்டவை
கோடநாடு விவகாரத்தில் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும், விழுப்புரத்தில் திருமணத்தில் திமுக கொடி நடுகையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் ஏன் திமுக பிரமுகர் கைது செய்யப்படவில்லை, ஆனால் அதிமுக இருக்கும்போது பேனர் வாகனத்தின் மீது விழுந்ததில் ஒரு பெண் இறந்தார் அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அதிமுக பிரமுகரை கைது செய்ய வேண்டும் என்று கூறினர். ஆனால் இப்போது அவர்கள் கட்சியில் தான் தவறு செய்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட திமுக வரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை சுரண்டி ஊழல் செய்து மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி, தற்போது பாஜக பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை குத்தகைக்கு விட்டு அதன் மூலம் வரும் முதலீட்டை கொண்டு பல உட்கட்டமைப்புக்களை பெருக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதனை காங்கிரஸ் கட்சி தேசத்திற்கு எதிராக மலிவான அரசியல் செய்து வருகிறது. விவசாயத்திற்காக தனி பட்ஜெட் போடுகிறோம் என்று செல்லும் திமுக அரசு விவசாய விரோத போக்கினை கடைபிடித்து விளை பொருட்களுக்கான ஆயுள் காப்பீட்டு பீரிமியத்தினை திட்டத்தினை செயல்படுத்தவில்லை; இதன் மூலம் திமுக அரசு விவசாயிகளை வஞ்சித்து விட்டது.
நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையில் சொன்னதும் பட்ஜெட்டில் சொன்னதும் வேறுவேறு விதமாக இருக்கிறது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை முட்டாள்கள் ஆக்க நினைப்பதாகவும் குற்றம் சாட்டியவர் நாராயணன் கூறினார்.